1. செய்திகள்

PMJDY: ஜன்தன் கணக்கு தகவல்கள் அறிவது எப்படி?

Daisy Rose Mary
Daisy Rose Mary

Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY) பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் திறக்கப்பட பிரதமர் ஜன்தன் கணக்கு (PM Jan dhan account) மத்திய அரசின் மிக முக்கிய திட்டமாக இருந்து வருகிறது. இந்த பிரதமரின் ஜன்தன் கணக்கினை எந்த வங்கயில் வேண்டுமானலும் திறந்து கொள்ளலாம். இதற்கு எந்த கட்டாய இருப்பு தொகையும் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

தற்போது கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மக்களின் வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு மானிய திட்டங்களை மக்களுக்கு அறிவித்துள்ளது. இந்த மானிய தொகை முழுவதும் நேரடியாக பிரதமரின் ஜன்தன் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரதமரின் ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களின் வங்கி வரவு செலவு கணக்குகளை சரி பார்ப்பதில் சிக்கல் நீடிப்பதாக தெரிவித்திருந்தனர். இதில் எஸ்பிஐ வங்கி (SBI Bank)தான் அதிகபடியான கணக்குகளை வைத்துள்ளது.

வங்கி இருப்பு நிலவரம் அறிய

இந்நிலையில் PMJDY திட்டத்தின் கீழ் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்காக SBI வங்கி ஒரு சிறப்பு வசதியை ஆரம்பித்துள்ளது. அதன்படி,

  • பிரதமரின் ஜன்தன் கணக்கு வைத்திருப்பவரும் தனது கணக்கின் வரவு செலவு இருப்பை எளிதாக "18004253800" அல்லது "1800112211" என்ற எண்ணுக்கு டையல் (Dail) செய்து தெரிந்து கொள்ளலாம்.

  • வாடிக்கையாளர் தனது பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து இந்த இலவச எண்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.

  • அழைப்பு செய்த பிறகு அவர்கள் இறுதியாக செய்த 5 பரிவர்த்தனைகள் மற்றும் அவர்களது வங்கி கணக்கு இருப்பு தொடர்பான விவரங்கள் கிடைக்கப்பெறும்.

  • SBI- யில் கணக்கு வைத்துள்ள மற்ற வாடிக்கையாளர்கள் "9223766666" என்ற எண்ணுக்கு அவர்களின் பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து அழைப்பு விடுப்பதன் மூலமும் அவர்கள் தங்களின் கணக்கு வரவு செலவு குறித்த விவரங்களை அறிந்து கொள்ள முடியும் என்று SBI வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மேலும் படிக்க..
    விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் கிசான் கிரெடிட் கார்டு! - விண்ணப்பிப்பது எப்படி?
    TN Govt: வேளாண் பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க தடை!

English Summary: Are you the Jan dhan account holder? Here the steps to Know Your Account Balance

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.