1. செய்திகள்

18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்க நடவடிக்கை!

R. Balakrishnan
R. Balakrishnan
Action to prevent minors from driving

18 வயதுக்கு குறைவானவர்கள், வாகனங்கள் ஓட்டுவதை தடுக்கும் வகையில், மோட்டார் வாகன சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நடேசன் சாலையில், இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த சிறுவன், ஆட்டோ மோதியதில் படுகாயம் அடைந்தான். விபத்து நடந்தபோது, வாகனத்தை ஓட்டிய சிறுவனுக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை.

இழப்பீடு (Relief fund)

ஏழு லட்சம் ரூபாய் இழப்பீடு கோரிய மனுவை, தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.கண்ணம்மாள் பிறப்பித்த உத்தரவு: விபத்து நடக்கும் போது, மனுதாரருக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை. அதை, தீர்ப்பாய விசாரணையின் போது, அவரே ஒப்புக் கொண்டுள்ளார். எனவே, வாகனம் இயக்குவதற்கு சட்டப்படி தடை உள்ளது. நம் மாநிலத்தில், வயது குறைவானவர்கள் வாகனங்களை ஓட்டுவது அதிகரித்து வருகிறது. இதனால், அப்பாவி உயிர்கள் பறிக்கப்படுகிறது;

பைக்' பந்தயம் (Bike Race)

'பைக்' பந்தயத்தில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர். வயது குறைவானவர்கள், வாகனங்கள் ஓட்டுவதை தடுக்கும் வகையில், சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். இதுபோன்ற விபத்து மீண்டும் நடக்காத வகையில், சட்டத்தை அமல்படுத்த வேண்டியவர்கள், அதற்கான வழிமுறைகளை கண்டறிவர் என இந்த நீதிமன்றம் நம்புகிறது.

இந்த வழக்கை பொறுத்தவரை, இழப்பீடு பெற மனுதாரருக்கு உரிமை இல்லை. தீர்ப்பாய உத்தரவில் குறைபாடு இல்லை. மனு தள்ளுபடி செய்யப் படுகிறது.

மேலும் படிக்க

கூடுதல் அறுவடை எந்திரங்களை குறைந்த வாடகையில் வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை!

வைப்பு நிதி வட்டியில் மாற்றம்: சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதல் வருமானம்!

English Summary: Action to prevent minors from driving! Published on: 05 March 2022, 02:42 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.