1. செய்திகள்

கிரெய்ன்ஸ் வலைத்தளத்தில் விவசாயிகள் விவரம் இணைக்கும் பணி தீவிரம்!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
add the details of farmers on the Grains website is intense in Namakkal

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், தேங்கல்பாளையம் கிராமத்தில், செல்போன் செயலி மூலம் கிரெய்ன்ஸ் வலைதளத்தில் விவசாயிகளின் அடிப்படை விவரங்களை பதிவேற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத்தொடர்ந்து, இராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செல்போன் செயலி மூலம் கிரெய்ன்ஸ் வலைதளத்தில் விவசாயிகளின் அடிப்படை விவரங்களை பதிவேற்றும் பணிகளை விரைந்து முடிப்பது குறித்து கிராம நிர்வாக அலுவலர்கள், வேளாண்மை துறை அலுவலர்கள் உள்ளிட்ட துறைச் சார்ந்த அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:

வேளாண் அடுக்கக திட்டமான கிரெய்ன்ஸ் வலைதளம் 2023 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பதிவு செய்து பயனடைய வேண்டும். இந்த வேளாண் அடுக்ககம் கிரெய்ன்ஸ் வலைதளம் உருவாக்குவதன் மூலம் நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் விவரம், நில உடைமை வாரியாக, புவியியல் குறியீடு செய்தல் மற்றும் நில உடைமை வாரியாக பயிர் சாகுபடி விவரம் ஆகிய அடிப்படை விவரங்களுடன் கிரெய்ன்ஸ் வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

13 துறைகள் ஒரே இடத்தில்:

இந்த வலைதளத்தில் விவசாயிகள் வருவாய்த்துறை, பேரிடர், மேலாண்மை, வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை, கூட்டுறவுத் துறை, பட்டு வளர்ச்சித் துறை உணவு வழங்கல் துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், விதை சான்றளிப்பு துறை, சர்க்கரைத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட 13 துறைகள் இணைக்கப்பட உள்ளது.

மேலும், இந்த வலைதளத்தின் மூலம் அரசின் நலத்திட்டங்கள் உரிய பயனாளிக்கு சென்றடைவதை உறுதிப்படுத்திட முடியும். இவை ஒற்றை சாளர வலைதளமாக செயல்படுவதால் விவசாயிகள் அனைத்து பயன்களுக்கும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கும் பொழுது ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.

விவசாயிகள் நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்வதால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் பயன்களை பெற்றுக் கொள்ளலாம். வேளாண்மை சார்ந்த அனைத்து துறைகளும் விவசாயிகளின் அடிப்படை விவரங்கள் மற்றும் பயிர் சாகுபடி விவரங்கள் மூலம் அனுப்பப்படும். மேலும் இந்த வலைதளத்தில் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகல், புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தக நகல், நிலப்பட்டா ஆவண நகல் ஆகியவைகளை தங்கள் பகுதியிலுள்ள கிராம நிர்வாக அலுவலர் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

இதனை நாமக்கல் மாவட்ட அனைத்து விவசாயிகளும், உரிய ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் / உதவி வேளாண்மை அலுவலர் / உதவி தோட்டக்கலை அலுவலரை அணுகி கிரெய்ன்ஸ் வலைதளத்தில் தங்களின் அடிப்படை விவரங்கள் பதிவு செய்யப்பட்டதை உறுதி செய்து அரசின் நலத்திட்ட உதவிகளை விரைந்து பெற்று பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுக்கோள் விடுத்தார்.

மேலும் காண்க:

Balasore- நானே 250 உடல்களை பார்த்தேன்.. ஒடிசா ரயில் விபத்தில் தப்பிய பயணி தகவல்

English Summary: add the details of farmers on the Grains website is intense in Namakkal Published on: 03 June 2023, 01:01 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.