1. செய்திகள்

தேசிய விலங்காக அறிவிக்கப்படும் பசு: அலகாபாத் உயர் நீதிமன்றம்

T. Vigneshwaran
T. Vigneshwaran

Cow declared as National Animal

பசுக்களை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம், அதன் பாதுகாப்பு இந்து சமூகத்தின் அடிப்படை உரிமைகளின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

அடிப்படை உரிமைகள் என்பது மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு மட்டுமல்ல, பசுவை வழிபடும் மற்றும் பொருளாதார ரீதியாக அதை நம்பியிருப்பவர்களுக்கும் அடிப்படை உரிமைகள் உண்டு என்று நேற்று ஒரு வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்தைத் தெரிவித்துள்ளது.

இந்திய கலாச்சாரத்தில் பசுக்கள் இன்றியமையாத அம்சமாக விளங்குகிறது என்பதுமட்டுமல்லாமல், பசு தாயாக வணங்கப்படுகிறது. "வேதங்கள் மற்றும் மகாபாரதம் போன்ற இந்தியாவின் பண்டைய நூல்களில், குறிப்பிட்டுள்ள விஷயங்கள்,  இந்திய கலாச்சாரத்தில் பசுக்கள் எந்த அளவிற்கு ஒரு முக்கியமான பகுதியாக இருந்தது என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம். அதனால், பசுக்களை ஒரு மதத்தோடு பொருத்தி பார்க்காமல், பசுவை காப்பாற்றுவது இந்திய குடிமகன் அனைவரது கடமை என்று நீதிபதி தெரிவித்தார்.

இதுமட்டுமல்லாமல், நாட்டில் நிலவும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, மாடுகளை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும். பசு பாதுகாப்பு என்பது இந்து சமூகத்தின் அடிப்படை உரிமைகளின் ஒரு அம்சமாக இருக்க வேண்டும் என்பதால், ஒரு நாட்டின் கலாச்சாரம்  போற்றி பாதுகாக்கப்படாமல் போனால்,  ​​அந்த நாடு பலவீனமடைகிறது,என்று நீதிபதி கூறினார்.

பஞ்சகவ்யம் எனப்படும் பசுவின் பால், தயிர், வெண்ணெய், சிறுநீர் மற்றும் மாட்டு சாணம் ஆகியவற்றால் ஆன பொருள், சில வியாதிகளுக்கு சிகிச்சையளிப்பதில்  பெரும் பங்களிப்பை வழங்குகிறது.

மேலும் படிக்க:

ஜல்லிக்கட்டில் வெளிநாட்டு இனங்களை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை

அடுத்த 36 மணி நேரத்திற்குத் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

English Summary: Cow declared as National Animal: Allahabad High Court

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.