1. செய்திகள்

ஏர் இந்தியா விமான கட்டணம் 50 % தள்ளுபடி: 3 மணி நேரத்திற்கு முன் டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு மட்டும்

KJ Staff
KJ Staff

ஏர் இந்தியா விமான சேவை பயணிகளுக்கு 50 %  தள்ளுபடியுடன் விமான சேவையை வழங்க முன் வந்துள்ளது.  விமான டிக்கெட் கட்டணங்களைப் பொருத்த வரையில் எப்பொழுதும் சற்று கூடுதலாக இருக்கும். இதற்கவே இதில் பயணிக்க விரும்புவோர் குறைந்தது 2 மாதங்களுக்கு முன்பாகவே பதிவு செய்வது வழக்கம்.

ரயிலில் பொதுவாக  தட்கல் சேவையினை நாடுவோர் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ரயில் மற்றும் விமான சேவையை கடைசி நேரத்தில் நாடுவோர்க்கு கட்டணம் இரண்டு  அல்லது மூன்று மடங்காக  வசூலிக்க படும். எனவே பெரும்பாலானோர் தங்களின் பயணத்தை குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பு தீர்மானிக்கின்றனர்.

 ஏர் இந்தியாவின் "hefty discount" சலுகையின் கீழ் 50 சதவீத தள்ளுபடி அறிவித்துள்ளது. பயணிகளுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும். பொதுவாக விமானம் கிளம்பும் நாள் மற்றும் நேரம் நெருங்க நெருங்க கட்டணம் உயர்ந்துகொண்டே போகும். ஆனால்  ஏர் இந்தியா சற்று மாறுபட்டு குறைந்த விலையில் டிக்கெட் வழங்க முன்வந்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் சேவை முடங்கியதை அடுத்து இந்த அதிரடி முடிவினை ஏர் இந்தியா எடுத்துள்ளது.  இது பற்றிய மேலும் விவரங்களுக்கு   ஏர் இந்தியா இணையதளம், மொபைல் செயலி மற்றும் விமான டிக்கெட் ஏஜெண்ட் மூலமாக தெரிந்து கொள்ளலாம்  என அறிவுப்பு வெளியிட்டுள்ளது.

English Summary: Air India Announced Huge Discount: Offer Avail For Those Who Book Three Hours before

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.