1. செய்திகள்

தவறு செய்து வைரலாகும் மாணவர்கள் மத்தியில், உன்னத பணியாற்றிய மாணவர்கள்!

Deiva Bindhiya
Deiva Bindhiya
Among the students who make mistakes and go viral, the students who did the noble work!

நெல்லை: சமீப நாட்களாக பள்ளி மாணவர்கள் தங்களது ஆசிரியர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவது, புனைப் பெயர் வைத்து அழைப்பது, தாக்க முற்படுவது, இருக்கைகளை உடைப்பது, போதைக்காக போதைப் பொருட்களை எடுத்துக்கொள்வது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இயல்பு வாழ்க்கையை பிரதிப்பலிப்பதுதான், சினிமா என்பது, அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், இவ்வாறான செயல்களை நேரில் காண கிடைக்காதவர்கள், சினிமாவிலாவது பார்த்திருப்பீர்கள்.

இந்த செயல்கள் அனைத்து தரப்பினரிடமும் விவாதத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அதற்கு நேர்மாறாக நெல்லை சந்திப்பில் உள்ள புகழ்பெற்ற பாரதியார், வ.உ.சி உள்ளிட்டோர் பயின்ற மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தங்களது செயல்களால், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

இப்பள்ளியின் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ஒன்றிணைந்து, தாங்கள் பயிலும் வகுப்பறைகளை தங்களுக்கு பின்னர் வரும் மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக வகுப்பறைச் சூழலை மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் வகுப்பறையை வண்ணம் தீட்டுவது, மின்விசிறி வாங்கிக் கொடுப்பது, மாணவர்கள் பயில தேவையான இருக்கைகளை ஏற்பாடு செய்து கொடுப்பது என்று பள்ளி பருவத்தை முடித்து கல்லூரி வாழ்க்கையை துவங்க இருக்கும் மாணவர்கள், இவ்வாறான செயலை செய்து அனைவருக்கும், முன்மாதிரியாக திகழ்கின்றனர்.

இப்பள்ளியின் 12ஆம் வகுப்பு ஈ பிரிவு மாணவர்கள் ஒன்றிணைந்து, தங்கள் வகுப்பறையை சீரமைப்பது குறித்த முடிவை எடுத்து தலைமையாசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்து, அவர்களின் ஒப்புதலோடு இந்த நற்செயல்களில் ஈடுபட்டு, செவ்வானே முடித்தும் உள்ளனர். ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவும், அதேவேளையில் தாங்கள் அப்படியில்லை மற்ற மாணவர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருப்போம் என்பதற்கு ஏதுவாக மாணவர்களின் செயல் அமைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

PM SVANidhi திட்டம்: தெருவோர வியபாரிகளுக்கானது...

NEET, CUET, JEE எனத் தேர்வுகளுக்குப் போட்டிப்போடும் மாணவர்கள்!

English Summary: Among the students who make mistakes and go viral, the students who did the noble work! Published on: 29 April 2022, 03:51 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.