1. செய்திகள்

Election Date: 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Assembly election dates of 5 states

சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தல் தேதியினை இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

தேர்தல் ஆணைய தகவலின் படி மாநிலம் வாரியாக சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு: மத்திய பிரதேசம் (230 இடங்கள்), ராஜஸ்தான் (200), தெலுங்கானா (119), சத்தீஸ்கர் (90) மற்றும் மிசோரம் (40).

சத்தீஸ்கர் மற்றும் மிசோரமில் நவம்பர் 7 ஆம் தேதி தேர்தல் தொடங்குகிறது. சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதலில் நவம்பர் 7 ஆம் தேதி மற்றும் பின்னர் நவம்பர் 17 ஆம் தேதி. இதைப்போல் மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் முறையே நவம்பர் 23 மற்றும் 30 ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறும்.

அனைத்து மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கையானது டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 40 நாட்களில் தேர்தல் ஆணைய குழு 5 மாநிலங்களுக்கும் சென்று அரசியல் கட்சிகள், மத்திய மற்றும் மாநில அமலாக்க அமைப்புகளுடன் தேர்தல் குறித்து விவாதித்துள்ளதாகவும், அதன்பின் இந்த தேர்தல் நடைப்பெறும் தேதி குறித்து முடிவெடுத்துள்ளதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

ஐந்து மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களில் 60 லட்சம் பேர் முதல் முறை வாக்காளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். ராஜஸ்தான், ம.பி., சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலுங்கானாவில் 1.77 லட்சம் வாக்குச்சாவடிகளை தேர்தல் குழு அமைத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மிசோரம் சட்டப்பேரவையின் பதவிக்காலம் டிசம்பர் 17 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெவ்வேறு தேதிகளில் முடிவடைகிறது.

தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) தற்போது ஆட்சியில் உள்ளது. மிசோரம் மற்றும் மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியில் உள்ளது. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சியில் உள்ளது.

நடைப்பெற உள்ள இந்த 5 மாநில தேர்தல், 2024 ஆம் ஆண்டு நடைப்பெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் எனக்கருதப்படும் நிலையில் இந்த 5 மாநில தேர்தல் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதையும் காண்க:

இதெல்லாம் தெரியாமல் அஸ்வகந்தா விவசாயத்தில் இறங்காதீங்க!

அரசு வேலையை உதறி டிராகன் பழ சாகுபடியில் இறங்கிய நபருக்கு அடிச்சது லக்

English Summary: Assembly election dates of 5 states announced by Chief Election Commissioner Published on: 09 October 2023, 01:55 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.