1. செய்திகள்

இரயில் பயணிகள் கவனத்திற்கு: இன்று 180 ரயில்கள் ரத்து!

R. Balakrishnan
R. Balakrishnan
IRCTC Train Cancel

பண்டிகை காலம் முடிந்த நிலையில் அனைவரும் அவர்களின் வேலைக்கு செல்லத் தொடங்கி இருப்பீர்கள். அதற்குமுன், சமயத்தில் இந்திய ரயில்வேத்துறை 2 தினங்களுக்கு ஒருமுறை ரயில்களை பராமரிப்பு காரணங்களுக்கு ரத்து செய்வது பயணிகளுக்கு சற்று சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரயில்கள் ரத்து

ரயில் பயணத்தை நம்பித்தான் பலரின் தினசரி வேலை உள்ளது. ரயில் பயணம் செய்ய நினைப்பவர்கள் அவர்கள் செல்லும் வழித்தடத்தில் எந்தெந்த ரயில்கள் ஓடுகின்றன, அன்றைய நாளில் எந்தெந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று முன்கூட்டியே தெரிந்துகொள்வது நல்லது. இதன் மூலம் சிரமம் இல்லாமல் விரும்பிய இடத்துக்கு விரும்பிய ரயிலில் முன்பதிவு செய்து பயணிக்க முடியும்.

இந்தியாவில் வாகனப் போக்குவரத்துக்கு இணையாக ரயில் போக்குவரத்தை நம்பி பயணம் செய்வோர் எண்ணிக்கைதான் அதிகம். அதிலும் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் தினமும் பயணம் செய்கின்றனர். இந்திய ரயில்வே செயல்பாடு மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்திய ரயில்வேயால் அக்டோபர் 25, இன்று 172 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

ரயில்வே துறை, IRCTC இணையதளத்தில் சமீபத்திய அறிவிப்பின்படி, இன்று புறப்பட வேண்டிய 172 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 35 ரயில்கள் பகுதியளவு இயங்கும் எனவும் அறிவித்துள்ளது.

முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியல் குறித்துத் தெரிந்துகொள்வதற்குக் கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும். https://www.irctchelp.in/cancelled-trains-list/

இன்று பயணம் செய்வதற்குமுன் உங்கள் ரயில் குறித்து விவரங்களை செக் செய்து கொண்டு பயணிக்கவும். சிரமங்களைத் தவிர்க்கவும்.

மேலும் படிக்க

தீபாவளிக்கு ஊருக்கு செல்ல தட்கலில் ரயில் டிக்கெட்: ஈஸியான வழிமுறை இதோ!

PM Kisan திட்டம்: போஸ்ட் ஆபிஸ் போனாலே போதும் விவசாயிகள் இதைச் செய்ய!

English Summary: Attention of train passengers: 180 trains canceled today!00 Published on: 25 October 2022, 09:01 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.