1. செய்திகள்

பாரத் பருப்பினைத் தொடர்ந்து பாரத் ஆட்டா | கோமாரி தடுப்பூசி முகாம்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Bharat Atta

27 ரூபாய் 50 காசுக்கு ஒரு கிலோ ஆட்டா மாவு வழங்கும் வகையில் பாரத் ஆட்டா மாவினை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அறிமுகப்படுத்தி விற்பனையினை தொடங்கி வைத்துள்ளார். மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்றைய தினம் கோமாரி நோய் இலவச தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதுத்தொடர்பான விரிவான தகவல்கள் பின்வருமாறு-

பாரத் ஆட்டா மாவு- மத்திய அரசின் சார்பில் விற்பனை தொடக்கம்: மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், 'பாரத்' பிராண்டின் கீழ் ஆட்டா மாவினை விற்பனை செய்வதற்கான 100 நடமாடும் வேன் வாகனங்களை புதுடெல்லியில் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் ஆட்டா மாவு ஒரு கிலோவுக்கு 27 ரூபாய் 50 காசுக்கு மிகாமல் சில்லறை விலையில் கிடைக்கும். இந்நிகழ்ச்சியில் பேசிய பியூஷ் கோயல், மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகளால் அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுக்குள் உள்ளது என்றார். தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையைக் குறைப்பதற்காக அரசின் சார்பில் மேற்கொண்டுள்ள முயற்சிகள் அனைத்தும் விவசாயிகளுக்கு பெரும் பயனளித்துள்ளன எனவும் தெரிவித்தார்.

முன்னதாக மத்திய அரசின் சார்பில் கேந்திரிய பந்தர், NAFED மற்றும் NCCF மூலம் ஒரு கிலோ பாரத் பருப்பை ரூ.60-க்கு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடங்கியது: தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் தெற்குசிலுக்கம்பட்டி ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 4-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இணைந்து நேற்று துவக்கி வைத்தார்கள்.

கோமாரி நோயினால் கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் பகுதியில் புண்கள் ஏற்படுகின்றன. சினையில் இருக்கும் கன்றும் பாதிக்கப்பட்டு இறக்கும் அபாயம் உள்ளது. மேலும் பால் அளவும் குறைந்துவிடும் என்பதால் கோமாரி நோயினை தடுக்க தடுப்பூசி திட்டம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

MFOI 2023- வேளாண் கண்காட்சியில் பங்கேற்க முன்பதிவு செய்வது எப்படி?

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நவ.6 ஆம் தேதி தொடங்கியுள்ள இந்த தடுப்பூசி முகாமானது வருகிற 26 ஆம் தேதி வரை நடைப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஆறு மாதத்திற்கு ஒரு முறை என ஆண்டுக்கு இரண்டு முறை, இலவசமாக அனைத்து கால் நடைகளுக்கும் (பசுவினம் மற்றும் எருமையினம்) 100% தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கிராமப்புறங்கள், குக்கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும், கால்நடை நிலையங்கள் மூலமாக நடைபெறும் முகாம்களில், இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தி பயன்பெறுமாறு விவசாய பெருமக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் காண்க:

சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை ஒரே நாளில் 300 ரூபாய் சரிவு!

PMFBY- விவசாயிகளே VAO- விடம் இந்த சான்றிதழ் வாங்குனீங்களா?

English Summary: Bharat Atta Scheme Launched Following Bharat dal Published on: 07 November 2023, 04:01 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.