1. செய்திகள்

நிதி ஆயோக் புதிய சிஇஓ பி.வி.ஆர்.சுப்ரமணியத்தின் பின்னணி என்ன?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Cabinet approved Subrahmanyam's appointment for CEO of niti aaoyg

நிதி ஆயோக் புதிய சிஇஓவாக பிவிஆர் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். நிதி ஆயோக்கின் சிஇஓவாக பணிபுரிந்து வந்த பரமேஸ்வரன் ஐயர் உலக வங்கியின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி ஆயோக் :

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி 2014 இல் ஆட்சிக்கு வந்த பிறகு, திட்டக் கமிஷனுக்குப் பதிலாக NITI (இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவனம்) ஆயோக் உருவாக்கப்பட்டது, இது ஜனவரி 1, 2015 அன்று உருவாக்கப்பட்டது.

இந்தியாவின் உச்ச சிந்தனைக் குழுவான NITI ஆயோக், நாட்டிற்கான கொள்கை உள்ளீடுகளை வழங்குகிறது. ஒரு சிந்தனைக் குழுவாக செயல்படும் நிதிஆயோக் அரசின் திட்டங்கள் விரைவாக செயல்படுவதற்கும், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்கும், தற்செயலான பிரச்சினைகளைக் கையாள்வதற்கும் ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

புதிய சிஇஓ நியமனம் :

நிதி ஆயோக் சிஇஓவாக பரமேஸ்வரன் ஐயர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகள் பணி நியமனம் செய்யப்பட்ட பரமேஸ்வரன் ஐயர், தற்போது உலக வங்கியின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். வாஷிங்கடனிலுள்ள உலக வங்கியில் 3 ஆண்டுகள் பரமேஸ்வரன் ஐயர் பதவியில் இருப்பார். இதனையடுத்து நிதி ஆயோக் அமைப்பின் புதிய சிஇஓவாக ஆந்திராவை சேர்ந்த பிவிஆர் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிவிஆர் சுப்ரமணியத்தின் பின்னணி :

சுப்ரமணியம் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர், பொறியியல் பட்டம் பெற்றவர். கூடுதலாக, அவர் லண்டன் பிசினஸ் ஸ்கூலில் மேலாண்மை பட்டம் பெற்றுள்ளார். 1987- ஆம் ஆண்டு சத்தீஸ்கர் கேடரின் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். 2004-2008 ஆண்டிற்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கின் தனிச் செயலாளராக பணியாற்றியுள்ளார். சுப்ரமணியம் 2015 ஆம் ஆண்டு வரை பிரதமரின் அலுவலக பணியில் இருந்தார், பின்னர் சத்தீஸ்கர் மாநில முதன்மைச் செயலாளராகவும் பின்னர் கூடுதல் தலைமைச் செயலாளராகவும் (உள்துறை) பணி புரிந்தார். 2018 ஆம் ஆண்டு ஜம்மு மற்றும் காஷ்மீரின் தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜம்மு மற்றும் காஷ்மீரின் தலைமைச் செயலாளராக இருந்த காலத்தில் பி.வி.ஆர்.சுப்ரமணியம், மாநில அதிகாரத்துவத்தில் மிக முக்கியமான நபராக இருந்தார்.

கடந்த ஆண்டு செப்.,30 ஆம் தேதி பணி ஓய்வு பெற்ற பிறகு இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. தற்போது நிதி ஆயோக்கின் சிஇஓவாக நியமிக்க கேபினட் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பதவியேற்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

5,108 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற வரட்டாறு நீர்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு

ஸ்டெர்லைட் ஆலையினை மீண்டும் திறக்க வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் ஆர்ப்பாட்டம்!

English Summary: Cabinet approved Subrahmanyam's appointment for CEO of niti aaoyg Published on: 21 February 2023, 11:28 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.