1. செய்திகள்

100 நாள் வேலை உறுதித்திட்டம் பலிகடா-எம்பி ராகுல் காந்தி கண்டனம்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
NREGA its now victim of govt’s repressive policies-says rahul MP

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஆதாரை இணைக்க வேண்டும் என்கிற ஒன்றிய அரசின் முடிவுக்கு ராகுல் காந்தி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் வகையில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்தபோது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை கொண்டு வந்தது. இதனிடையே தற்போது மோடி தலைமையிலான ஒன்றியஅரசு ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் ஆதாரை இணைக்க கட்டாயமாக்கியுள்ளது. மேலும், ஒன்றிய அரசு கடந்த பிப்.,1 ஆம் தேதி தாக்கல் செய்த நிதிநிலை பட்ஜெட்டிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் செயல்படும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டை வெகுவாக குறைத்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி உட்பட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தனது முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவின் விவரம் பின்வருமாறு –

ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஆதார் இணைப்பை கட்டாயமாக்கினால் 57 சதவீத ஏழைகள் தங்கள் அன்றாட ஊதியத்தை இழப்பார்கள். சமூகத்திலுள்ள ஏழைப்பிரிவினருக்கு எதிராக அரசு ஆதாரை தவறாகப் பயன்படுத்துகிறது. ஊரக வேலை வாய்ப்பு திட்டம் இந்தியாவின் கிராமப்புற பொருளாதாராத்தின் அடித்தளம். எண்ணற்ற குடும்பங்களை வாழ வைத்த ஒரு புரட்சிக்கரமான கொள்கை. இத்திட்டத்தை ஒன்றிய அரசு தனது அரசியல் அடக்குமுறை கொள்கைகளுக்கு பலி கொடுத்துவிட்டது.

மேலும் படிக்க: PM கிசான் 13வது தவணை நிலை அறிய வேண்டுமா?| விதைப்பண்ணை அமைக்க மானியம்| TNAU 2 நாள் பயிற்சி

விதைப் பண்ணை அமைக்க அரசின் மானியம் இதோ!

புதிய வேலை வாய்ப்பை வழங்குவதற்கான எந்த கொள்கையும் அரசிடம் இல்லை. ஆனால் மக்களின் வேலை வாய்ப்பை பறித்து ஏழைகள் உரிய பணத்தை பெறுவதில் சிரமத்தை ஏற்படுத்துவதே மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது. புதிய யோசனை இல்லை, புதிய திட்டம் இல்லை. இந்த அரசின் ஒரே கொள்கை “ஏழைகள் சித்ரவதைஎன ஒன்றிய அரசை கடுமையாக சாடியுள்ளார் ராகுல் காந்தி. இதைப்போல், காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவும் டிவிட்டரில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு – 

ஒன்றிய  அரசு தாக்கல் செய்த நடப்பாண்டிற்கான நிதி பட்ஜெட்டில், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான நிதியை 33 சதவீதம் குறைத்துள்ளது. மத்திய அரசின் திட்டமான ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு இனி மாநில அரசு 40 சதவீத நிதியை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். மோடி அரசு ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மீது கோடாரியை வீசியுள்ளது. இந்த முடிவால் ஏழைகள் உங்களை மன்னிக்க மாட்டார்கள் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க :

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி எப்போது ? கைவிரித்த ஒன்றிய அரசு

காட்டுப்பன்றியை வன விலங்குகள் பட்டியலில் இருந்து விலக்குக-விவசாயிகள் கோரிக்கை

English Summary: NREGA its now victim of govt’s repressive policies-says rahul MP Published on: 18 February 2023, 01:53 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.