1. செய்திகள்

இந்தியா - ஃபிஜி இடையே வேளாண் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகமும், ஃபிஜி குடியரசு நாட்டின் வேளாண்மை அமைச்சகமும், விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

 

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி இந்தியா, ஃபிஜி நாடுகளுக்கிடையே கீழ்க் காணும் துறைகளில் ஒத்துழைப்பு வழங்கப்படும்:

  • ஆராய்ச்சியாளர்கள், அறிவியல் நிபுணர்கள், வல்லுநர்கள், தொழில்நுட்பப் பயிற்சியாளர்களை பரிமாறிக் கொள்ளுதல்

  • தொழில்நுட்ப மேம்பாடும், இடமாற்றமும்

  • வேளாண் வளர்ச்சிக்காக உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்

  • அதிகாரிகள், விவசாயிகளுக்கு, கருத்தரங்கங்கள், பயிலரங்கங்களின் மூலம் பயிற்சி அளிப்பதன் வாயிலாக மனித வளங்களை மேம்படுத்துதல்

  •  இரு நாடுகளின் தனியார் துறைகளுக்கிடையே கூட்டு முயற்சிகளை ஊக்குவித்தல்

 

  • வேளாண் பொருட்களின் மதிப்பு கூட்டலிலும், சந்தைகளிலும் முதலீடுகளை ஊக்குவித்தல்

  • விவசாயத்தின் அனைத்துத் துறைகளிலும் செயல்திறன் வளர்ச்சியை ஊக்குவித்தல்

  • சந்தைகளின் மூலம் விவசாயப் பொருட்களின் நேரடி வர்த்தகத்தை ஊக்குவித்தல்

  • ஆராய்ச்சி திட்ட முன்மொழிவுகளை மேம்படுத்துவது குறித்து கூட்டாக திட்டமிடுதல் மற்றும் ஆராய்ச்சித் திட்டங்களை செயல்படுத்துதல்

  • தாவர நலன் தொடர்பான விஷயங்களுக்காக இந்திய-ஃபிஜி பணிக் குழுவை நியமித்தல் மற்றும் இரு நாடுகளின் பரஸ்பர சம்மதத்துடன் இதர துறைகளில் ஒத்துழைப்பு

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இரு நாடுகளின் நிர்வாக முகமைகளின் வாயிலாக பரிந்துரைக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்காக கூட்டு பணிக் குழு அமைக்கப்படும். இந்த பணிக் குழு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் இந்தியாவிலும் ஃபிஜியிலும் தனது கூட்டத்தை நடத்தும்.

ஒப்பந்தம் கையெழுத்தாகும் தினம் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமலில் இருக்கும்.

மேலும் படிக்க...

இயற்கை முறை காய்கறி சாகுபடிக்கு மானியம் - விவசாயிகளுக்கு அழைப்பு!!

சோலார் மின்வேலி அமைக்க 2 லட்சம் வரை மானியம் - விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு!!

பள்ளி & கல்லூரி மாணவர்களின் விவசாயத் தேடல்!! - "வேளாண் அறிவியல் நிலையத்தில் ஒருநாள்"

English Summary: Cabinet approves MOU between India and Fiji for cooperation in the field of Agriculture and Allied Sectors Published on: 04 March 2021, 07:53 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.