1. செய்திகள்

கரண்ட் பில் கட்ட சொல்லி போன் வருதா? இதை நோட் பண்ணுங்க

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Tangedco

EB பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என போலி குறுஞ்செய்தி அனுப்பி பண மோசடியில் ஈடுபடும் சம்பவம் நடைப்பெறும் நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

என்னென்ன காரணங்கள் சொல்லி மோசடியில் ஈடுபட வாய்ப்புண்டு என்பது குறித்தும் தமிழ்நாடு மின்சார வாரியம் (Tangedco) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அது மோசடி அழைப்பு நீங்கள் கருதும் பட்சத்தில் உடனடியாக செய்ய வேண்டிய நடைமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மின்சார கட்டண செலுத்தும் மோசடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சில குறிப்புகளை தமிழ்நாடு மின்சார வாரியம் (Tangedco) வெளியிட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-

  1. குறுஞ்செய்தி வந்த எண்ணை சரிபார்க்கவும். நம்பகமற்ற எண்ணாக இருந்தால் புறக்கணிக்கவும்.
  2. செய்தியில் எழுத்து பிழைகள் இருக்கும்.
  3. சைபர் பாதுகாப்பு இலச்சினையான https:// மற்றும் பூட்டு 🔒 இல்லாமல் இருக்கும்.
  4. தொடர்பு கொள்பவர் வேற்றுமொழி உச்சரிப்புடன் பேசுவர்.
  5. சிறிய தொகையான ₹10 மட்டும் செலுத்தினால் போதும் என்று கூறுவர்.
  6. உடனே எச்சரிக்கை ஆகி புகார் அளிக்கப்படும் எனக் கூறி இணைப்பை துண்டிக்கவும்.

EB பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் பொதுமக்கள் செய்ய வேண்டிய நடைமுறைகள் பின்வருமாறு-

  1. பதட்டம் அடைய வேண்டாம்
  2. உங்கள் பில் நிலைப்பாடு சரி பார்க்கவும்
  3. அந்த எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம்
  1. இணைய லிங்கக்கை கிளிக் செய்ய வேண்டாம்
  2. உடனடியாக 1930 ஐ அழைத்து புகார் அளிக்கவும்
  3. உறவினர்கள், நண்பர்களுக்கு தகவலை பகிரவும்

புகார் அளிக்கும் முறைகள்:

  • கட்டணமில்லா தொலைபேசி எண்- 1930
  • இணையம்: https://cybercrime.gov.in
  • சமூக ஊடகம் வாயிலாக:  @tncybercrimeoff

சென்னை அமலாக்க கோட்டத்தால் சமீபத்தில் நடத்தப்பட்ட கோட்ட அளவிலான திடீர் சோதனையின் போது, சென்னை மத்திய, சென்னை வடக்கு, சென்னை மேற்கு, சென்னை தெற்கு, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய அமலாக்க பிரிவுகள் கே.கே.நகர் கோட்டத்தில் 5 மின்சார திருட்டு வழக்குகளை கண்டறிந்துள்ளன.

திருடப்பட்ட மின்சாரத்தால் வாரியத்திற்கு ஏற்பட்ட இழப்புக்கு ஈடாக நுகர்வோர்கள் மீது ரூ.7,74,701/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு வழக்கை முடித்து வைக்க விரும்பி ரூ.28,000/- அபராதம் செலுத்தியுள்ளனர். இதனால், காவல் நிலையங்களில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. மொத்தம் ரூ.8 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

மின்சாரத் திருட்டு குறித்த தகவல்களை சென்னை அமலாக்க கோட்டத்தின் செயற்பொறியாளர் (அமலாக்கம்) அலுவலகத்திற்கு 9445857591 என்ற கைபேசி எண்ணில் தெரிவிக்கவும் தமிழ்நாடு மின்சார வாரியம் (Tangedco) சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் காண்க:

Gold Rate Today- தொடர்ந்து 2 வது நாளாக தங்கத்தின் விலை சரிவு!

81.5 கோடி இந்தியர்களின் தகவல்கள் விற்பனைக்கு- அதிர்ந்து போன அரசு

English Summary: Calling to pay the current bill kindly note this says Tangedco Published on: 31 October 2023, 02:15 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.