1. செய்திகள்

ஒகேனக்கல் அருவியில் காவிரி தாய் சிலை தேவை - அமைச்சர் ஜி.கே. மணி வேண்டுகோள்

Ravi Raj
Ravi Raj
Cauvery Mother Statue at Hogenakkal Waterfalls..

ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் காவிரி தாய் சிலை?

சட்டப் பேரவையில் பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி கோரிக்கை.

தர்மபுரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான ஒகேனக்கல் தென்னிந்தியாவின் நயாகரா நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. பரிசல் ஓட்டுபவர்கள்மீன் வியாபாரிகள் மற்றும் எண்ணெய் மசாஜ் உட்படசுமார் 1000 குடும்பங்கள் இந்த சுற்றுலா தலத்தை தங்களுடைய வேலைக்காக நம்பியுள்ளனர்.

கூடுதலாகஒகேனக்கல் சுற்றுலா தளம் மாவட்டத்திற்கு குறிப்பிடத்தக்க வருவாயை உருவாக்குகிறது. இந்த சுற்றுலா தலத்தை மேம்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை நேற்று சட்டப்பேரவையில் நடைபெற்றது. கேள்வி நேரத்தின் போது பாமக தலைவரும்பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி பேசியதாவது:-

"வரலாற்றுச் சிறப்புமிக்க ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்திற்கு வெளி மாநிலங்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்த சுற்றுலாத் தலத்தை உலகத் தரம் வாய்ந்தவையாக மேம்படுத்திகாவிரிக் கோட்டம்காவிரி அருங்காட்சியகம் வேண்டும்மேலும் ஒகேனக்கல்லில் காவிரி தாய் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும்" என கோரிக்கை அறிவித்தார்.

இதற்குப் பதிலளித்த சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், “தமிழகத்தில் உள்ள 300 சுற்றுலாத் தலங்களில் ஒகேனக்கல் சுற்றுலாவும் ஒன்று. நிதி நிலைமைக்கு ஏற்ப முதலமைச்சருடன் கலந்தாலோசித்து வரும் ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மேலும் படிக்க..

ஒகேனக்கல் அருவி பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை!!

உயர்ந்து வரும் அணையின் நீர் மட்டம்: ஆர்ப்பரித்து கொட்டும் ஒகேனக்கல் அருவி

English Summary: Cauvery Mother Statue at Hogenakkal Waterfalls Need - Minister G.K. Mani Request Published on: 27 April 2022, 12:36 IST

Like this article?

Hey! I am Ravi Raj. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.