1. செய்திகள்

மத்திய அரசின் கண்டிப்பான உத்தரவு -2-ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது

KJ Staff
KJ Staff

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை வெளியிட்ட அரசாணை:

மத்திய அரசின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப கற்பித்தல் முறை, புத்தக பைகளின் சுமை ஆகியவற்றை மாநில அரசுகள் ஒழுங்குமுறைபடுத்த வேண்டும்.

பள்ளிகளில் 2-ம் வகுப்பு வரை கண்டிப்பாக வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்தாவிட்டால் அனைத்து மாநில பள்ளிக் கல்வித் துறை செயலாளர்களும் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் எச்சரித்துள்ளார்.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) பாடத்திட்ட விதிகளை மீறி சிபிஎஸ்இ பள்ளிகள் ஒன்று முதல் 3-ம் வகுப்பு வரை 8 பாடங்களைப் போதிக்கின்றன. சிறு குழந்தைகளுக்கும் வீட்டுப்பாடம், அசைன்மெண்ட் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. தனியாரிடம் இருந்து புத்தகங்களை வாங்க வேண்டும் என்பதற்காக இந்தப் பாடங்களை தனியார் பள்ளிகள் குழந்தைகள் மீது திணிக்கின்றன. குழந்தைகள் தங்களது எடையைக் காட்டிலும் கூடுதல் எடையை புத்தக சுமையாக சுமந்து செல்கின்றனர். இதனால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே சிபிஎஸ்இ பள்ளிகள் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை மட்டுமே பின்பற்ற  வேண்டும்.

மேலும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 1ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தாய் மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம் மட்டும்தான் கற்பிக்க வேண்டும் என்று என்சிஇஆர்டி அறிவுறுத்தியுள்ளது.

இந்த உத்தரவை அமல்படுத்த கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டுமென சிபிஎஸ்இ பள்ளிகள் தரப்பில் கோரப்பட்டது.

மேலும், ஒன்றாம், இரண்டாம் வகுப்பு மாணவ, மாணவியரின் புத்தக பையின் எடை 1.5 கிலோவை தாண்டக்கூடாது. மூன்றாம், நான்காம் வகுப்புக்கு புத்தக பையின் எடை 2 கிலோ முதல் 3 கிலோ வரை இருக்கலாம்.

5, 6-ம் வகுப்புக்கு 4 கிலோ, 8, 9-ம் வகுப்புக்கு 4.5 கிலோ, 10-ம் வகுப்புக்கு புத்தக பையின் சுமை 5 கிலோவை தாண்டக்கூடாது.

இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary: Central Government new order for schools

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.