Krishi Jagran Tamil
Menu Close Menu

வட தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு; விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் கன மழை இருக்கும்!!

Friday, 23 October 2020 02:06 PM , by: Daisy Rose Mary

நேற்று மத்தியமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று சாகர் தீவு மற்றும் சுந்தர்பன் காடுகளுக்கு இடையே கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

3 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

வட தமிழக கடலோர பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகம், கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மழை பெய்யும்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை பொழிவு

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 17செ.மீ, ராம கிருஷ்ண ராஜு பேட்டை (திருவள்ளூர்) 13செ.மீ, தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்) தலா 11செ.மீ, திருத்தணி (திருவள்ளூர்), திருத்தணி P.T.O (திருவள்ளூர்) தலா 9செ.மீ, மதுராந்தகம் (செங்கல்பட்டு), திருவள்ளூர் (திருவள்ளூர்), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), வேம்பாக்கம் (திருவண்ணாமலை), புதுச்சேரி (புதுச்சேரி) தலா 7செ.மீ, திருவாலங்காடு (திருவள்ளூர்), சோழிங்கநல்லூர் (சென்னை), செய்யூர் (செங்கல்பட்டு), அரக்கோணம் (ராணிப்பேட்டை), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்) தலா 6செ.மீ, கொரட்டூர் (திருவள்ளூர்), பொன்னேரி (திருவள்ளூர்), ஆலந்தூர் (சென்னை), சென்னை விமானநிலையம் (சென்னை), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), பெரம்பூர் (சென்னை) தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

அக்டோபர் 23 வடக்கு வங்க கடல் பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

மேலும் படிக்க...

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22% சதவீதமாக உயர்த்த தமிழக அரசு பரிந்துரை - அமைச்சர் காமராஜ்!

செங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கத்தில், 33 ஏக்கரில் இயற்கை தோட்டம் !!

குழாய் கிணறு, துளை கிணறு அமைக்க ரூ.25 ஆயிரம் வரை மானியம் - பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு!!

 

வடகிழக்குப் பருவ மழை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு Rain Alert சென்னையில் மழை வானிலை மையம் rain in chennai Tamil nadu expects Rain
English Summary: Chance of rain in North Tamil Nadu and Puducherry and There will be heavy rain in Villupuram, Kallakurichi and Cuddalore !!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. நிவர் புயல் பாதிப்பு : பயிர் சேதம் கணக்கெடுப்பு துவக்கம்!!
  2. 10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்பு உருவாக்கும் முயற்சி : தேன் உழவர் உற்பத்தியாளர் அமைப்பு துவக்கம்!!
  3. ஓசூரில் மாறி வரும் காலநிலை! குளிர்கால நோய்கள் தாக்குவதால் ரோஜா விவசாயிகள் கவலை!
  4. மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரம் அரசு பரிசீலிப்பதாக வேளாண்துறை தகவல்!!
  5. நிவர் புயல் எதிரொலி : சூறைக்காற்றில் சிக்கிய வேளாண் பயிர்கள் - விவசாயிகள் வேதனை!!
  6. தேசிய பால் தினம் 2020 : வெண்மைப் புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியன் குறித்து தெரியுமா உங்களுக்கு!!
  7. கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளும் கடைசி நபராக நான் இருக்க விரும்புகிறேன்- ஜக்கி வாசுதேவ்!
  8. பயிர் கடன் பெறுவது எப்படி? பயிர் கடன் தரும் வங்கிகள் என்னென்ன? முழு விவரம் உள்ளே!!
  9. Niver Cyclone : அதிகாலையில் கரையைக் கடந்தது - 140 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்றுடன் கனமழை- வெள்ளத்தின் பிடியில் தமிழகம்!
  10. அதிதீவிர புயலாக மாறியது நிவர்; மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்கிறது!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.