1. செய்திகள்

மெட்ரோ ஆரம்பித்தது முதல் இதுதான் அதிகம்- மாஸ் காட்டிய சென்னை மெட்ரோ

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Chennai metro rail register highest passengers arrive month in history

சென்னை மெட்ரோ இரயில்களில் நடப்பாண்டில் கடந்த 5 மாதங்களை விட ஜூன் மாதத்தில் மட்டும் 1.38 லட்சம் பயணிகள் அதிகம் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, சுற்றுச்சூழல் மாசுபாட்டினை கட்டுக்குள் வைக்கும் வகையில் பொது போக்குவரத்தினை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்த அரசின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. சென்னை போன்ற மாநகரங்களில் மெட்ரோ சேவையினை பொதுமக்கள் பயன்படுத்தும் தன்மை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு மே மாதத்தை விட ஜூன் மாதத்தில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 869 பயணிகள் அதிகமாக மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை என்றும் மெட்ரோ இரயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள பயணிகள் வருகை விவரம் பின்வருமாறு-

நடப்பு அண்டு ஜனவரி மாதத்தில் 66,07,458 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 63,69,282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69,99,341 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 66,85,432 பயணிகளும், மே மாதத்தில் 72,68,007 பயணிகளும் மற்றும் ஜூன் மாதத்தில் 74,06,876 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 28.06.2023 அன்று ஒரே நாளில் 2,95,509 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2023, மே மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 25,15,727 பயணிகளும், பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 44,81,995 பயணிகளும், டோக்கன்களை பயன்படுத்தி 3,98,131 பயணிகளும் பயணித்துள்ளனர்.

இதைப்போல் குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 5,085 பயணிகளும் மற்றும் சிங்காரா சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 5,938 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் எண் (+91 83000 86000) மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

சென்னையில் மெட்ரோ சேவை தொடங்கியதில் இருந்தே அதிகளவிலான பயணிகள் வருகைத் தந்துள்ள நிலையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சார்பில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி வரும் மாதங்களில் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என சென்னை மெட்ரோ நிறுவனத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் காண்க:

முதல் தலைமுறை பட்டதாரி- தவறான தகவல் அளித்தால் இப்படி ஒரு தண்டனையா?

English Summary: Chennai metro rail register highest passengers arrive month in history Published on: 03 July 2023, 02:28 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.