
CM Stalin started breakfast program in government schools from today!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை, நெல்பேட்டையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக பள்ளிகளுக்கு காலை உணவு எடுத்துச் செல்லும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு உணவினை ஊட்டி மகிழ்ந்தார்.
பள்ளியில் இடைநிற்றலைத் தடுப்பதாக நம்பப்படும் மதிய உணவுத் திட்டத்தைப் போலவே, இந்தத் திட்டம் பெற்றோர்களின் சுமையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் இளம் மாணவர்கள் தங்கள் பள்ளி நாளை வெறும் வயிற்றில் தொடங்க கூடாது என்பதையும் உறுதி செய்கிறது.
சமையற்காரர்களுக்கு மாவட்டங்களில் உள்ள கேட்டரிங் நிறுவனங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், செஃப் தாமு, மாவட்டங்களில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்களின் ஒரு சிறிய குழுவிற்கு அரசால் குறிப்பிடப்பட்ட இந்த உணவுகளை தயாரிப்பதில் பயிற்சி அளித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
ஒவ்வொரு மாவட்டத்திலும், சுயஉதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ள இரண்டு முதல் மூன்று சமையற்காரர்கள் கண்டறியப்பட்டு, உணவு தயாரிக்கும் பயிற்சியும், அவர்கள் தயாரிப்பதில் உள்ள ஊட்டச்சத்து மதிப்பு குறித்தும் கற்பிக்கப்படுகிறது. விருதுநகரில், மாவட்டத்தில் இத்திட்டம் முதலில் தொடங்கப்பட உள்ள காரியபட்டி தொகுதியில் சமையல்காரர்களுக்கான பயிற்சிக்கு ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமை வகித்தார்.
உணவு வழங்கும் நாட்களை தங்கள் விருப்பப்படி மாற்றிக் கொள்ளலாம் என மாவட்டம் நிர்வாகங்களுக்கு அரசு தெரிவித்திருந்தது. விருதுநகரில் மெனுவில் உப்மா பொதுவானது என்பதால், மாணவர்களுக்கு எல்லா நாட்களிலும் முக்கிய உணவுடன் சாம்பார் கிடைக்கும். " முதல் மாதம் ஒரு சோதனை காலமாக இருக்கும், மாணவர்கள் எந்த உணவை விரும்புகிறார்கள் என்பதைப் பார்க்கவும், மற்றவர்களை விட அதிக நாட்களில் நாங்கள் அதை வழங்குவோம்" என்று ரெட்டி கூறினார்.
சாதாரண உப்மாவை இவ்வளவு ருசியாக செய்ய முடியும் என்று தெரியவில்லை என்கிறார் பயிற்சியில் உள்ள சமையல் கலைஞர்களில் ஒருவரான கே. உஷா. "தக்காளி, வெங்காயம் மற்றும் குறைவான மசாலாப் பொருட்கள் உண்மையில் குழுந்தைகளுக்குப் பிடிக்கும். அவர்கள் சிறு குழுந்தைகளாக இருப்பதால் உணவு மிகவும் காரமாக இல்லை என்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளோம்," என்று அவர் கூறினார். "முந்திரி மற்றும் சன்னா பருப்பை சுவையாகவும் கவர்ச்சியாகவும் சேர்க்கச் சொன்னோம்," என்று அவர் கூறினார்.
உணவு தரமானதாக இருப்பதை உறுதி செய்ய சமையல்காரர்களுக்கு அறுவுறுத்தப்பட்டுள்ளது. தொகுதி வளர்ச்சி அலுவலர் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட மேற்பார்வைக் குழு சோதனை நடத்தும். திருச்சி, துறையூர் தொகுதியில் உள்ள (41 கிராமப்புற) தொட்டக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு உணவு சமைப்பதற்காக மகளிர்த் திட்டத் துறை மூலம் சுமார் 123 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். திருச்சியில் நகர்புறம் மற்றும் துறையூர் தொகுதி முன்னோடி திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டது.
"சமையல்காரர்களைத் தேர்ந்தெடுக்கும் போது, சுய உதவிக் குழுவில் ஈடுப்படும் பெற்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது, இதனால் அவர்கள் குழுந்தைகளுக்கு சுகாதாரமான உணவைத் தயாரிப்பதற்கு கூடுதல் மைல் செல்வார்கள்" என்று திருச்சியின் மகளிர் திட்டத்தின் திட்ட அதிகாரி கே.ரமேஷ் குமார் தெரிவித்தார்.
கோவையில் உள்ள 7618 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள், இது மாநகராட்சிகளில் அதிகமாகும்.
மேலும் படிக்க:
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: மூன்றாவது ரயில் இந்த மாதத்தில் தொடக்கம்!
Share your comments