1. செய்திகள்

செறிவூட்டப்பட்ட அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவுகளை வழங்கிய ஆட்சியர்- காரணம் இதுதானா?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Collector created awareness by providing food made from enriched rice

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பாக செறிவூட்டப்பட்ட அரிசியின் பயன் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செறிவூட்டப்பட்ட அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, இஆப., நேற்று பொதுமக்களுக்கு வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி (AAY மற்றும் PHH) குடும்ப அட்டைதாரர்களுக்கு குடும்ப உணவுபொருள் வழங்கல் துறை சார்பாக பொது விநியோக திட்டத்தின் கீழ் நியாயவிலை அங்காடிகள் மூலம் ஊட்டச்சத்து மிக்க செறிவூட்டப்பட்ட அரிசியை பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

அரசின் உத்தரவுப்படி செறிவூட்டப்பட்ட அரிசியானது 01.04.2023 முதல் நியாயவிலை அங்காடிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கெனவே செறிவூட்டப்பட்ட அரிசியானது, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் மதிய உணவு திட்டங்களுக்கு கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரப்படுகிறது.

இந்த செறிவூட்டப்பட்ட அரிசியானது 1:100 என்ற விகிதாச்சாரத்தில் கலக்கப்பட்டு சமமான செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்கப்பட்டு நியாயவிலை கடைகள் மூலம் விலையின்றி வழங்கப்படுகிறது. பெண்கள், குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள் போன்றவர்களுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறையை தவிர்க்கும் பொருட்டு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது.

இந்நிலையில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பாக செறிவூட்டப்பட்ட அரிசியின் பயன் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செறிவூட்டப்பட்ட அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, இஆப., நேற்று (03.04.2023) பொதுமக்களுக்கு வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

செறிவூட்டப்பட்ட அரிசியில் உள்ள ஊட்டசத்தானது ரத்த சோகையினை தடுக்கவும், உடலுக்கு தேவையான இரும்பு சத்து, போலிக் அமிலம் கருவளர்ச்சி மற்றும் இரத்த உற்பத்திக்கும் பயன்படுகிறது. வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் இயற்கையான செயல்பாட்டிற்கு வழிவகுக்கிறது. பொது விநியோகதிட்டத்தின் கீழ் நியாய விலை அங்காடிகள் மூலம் ஊட்டச்சத்து மிக்க செறிவூட்டப்பட்ட அரிசியை பெற்று பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் செறிவூட்டப்பட்ட அரிசியின் பயன் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, இஆப., பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அனிதா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் திரு.இராஜேந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.இராமதாஸ், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.ஜெ.ஜெயக்குமார், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) வி.கே.சாந்தி, ஆகியோர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் காண்க:

எங்கடா.. இங்க இருந்த பறவையை காணும்- டிவிட்டர் பயனாளர்களுக்கு அதிர்ச்சியளித்த மஸ்க்

English Summary: Collector created awareness by providing food made from enriched rice Published on: 04 April 2023, 11:05 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.