1. செய்திகள்

சிலிண்டர் விலையில் புதிய மாற்றம்- மாநிலம் வாரியாக எவ்வளவு விலை?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
cylinder price hike

பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், வர்த்தக LPG சிலிண்டர்களின் விலையை ரூ.26 வரை உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வானது இன்று (டிசம்பர் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக செப்டம்பர் மாதம் எண்ணெய் நிறுவனங்கள் 19 கிலோ வர்த்தக எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலையை 158 ரூபாய் குறைத்திருந்தன. அக்டோபர் மாதம் வர்த்தக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.209 உயர்த்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து நவம்பர் மாதத் தொடக்கத்திலும் ரூ.100 வரை உயர்த்தப்பட்டது. இதனிடையே மீண்டும் விலையேற்றம் கண்ட சிலிண்டரால் வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.அதே நேரத்தில் வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலையில் மாற்றமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ₹1,942-க்கு விற்கப்பட்ட சிலிண்டர், தற்போது ₹1,968-க்கு விற்பனையாகிறது. உயர்த்தபட்ட விலையில் அடிப்படையில் மாநிலம் வாரியாக வணிக ரீதியான LPG சிலிண்டர்களின் சமீபத்திய விலை நிலவரம் பின்வருமாறு-

  • டெல்லி- ரூ.1,796.50
  • மும்பை- ரூ.1,749
  • கொல்கத்தா- ரூ.1,908

ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களின் வாக்குப்பதிவு நேற்றோடு நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக தேர்தல் அறிவிப்பதற்கு முன் நவம்பர் 16 அன்று வணிக ரீதியான LPG விலை 57 ரூபாய் குறைக்கப்பட்டது. இந்த முடிவை அரசு தேர்தல் கண்ணோட்டத்தோடு எடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் அப்போது கருத்து தெரிவித்தனர். கடைசியாக வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை கடந்த மார்ச் 1 ஆம் தேதி திருத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்துக்கு மாநிலம் சிலிண்டர் விலை மாறுவது ஏன்?

ஒவ்வொரு குடும்பமும் ஒரு வருடத்தில் தலா 14.2 கிலோ எடையுள்ள 12 சிலிண்டர்களை மானிய விலையில் பெற இயலும். PAHAL (எல்பிஜியின் நேரடி பயன் பரிமாற்றம்) திட்டத்தின் கீழ், நுகர்வோர் மானிய விலையில் எல்பிஜி சிலிண்டர்களைப் பெறுகின்றனர். மாநில அரசு விதிக்கும் வரிகள் காரணமாக உள்நாட்டு சமையல் எரிவாயுவின் விலைகள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாறுபடுகிறது.

எரிபொருள் விற்பனை நிலையங்கள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் LPG சிலிண்டர்களின் விலையை மாற்றியமைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விலை நிர்ணயம் அந்நிய செலாவணி விகிதங்கள், கச்சா எண்ணெய் விலை போன்ற பல காரணிகளைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் குறிப்பிடுகின்றனர். வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லையென்பதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் மாற்றமில்லை எனத் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த மாதம் விற்ற அதே விலை தற்போதும் நீடிக்கிறது. அதன்படி புதுதில்லியில் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.903, கொல்கத்தாவில் ரூ.929, மும்பையில் ரூ.902.5, சென்னையில் ரூ.918.5 என தொடர்ந்து பொதுமக்களுக்கு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் காண்க:

நச்சலூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் ஆணிவேர்- கீழப்பட்டி கரிகாலனின் வெற்றிக்கதை

சிங்கார சென்னைக்கு சோதனை- இந்த மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை

English Summary: cylinder price hike from dec 1 and state wise cost details here Published on: 01 December 2023, 10:17 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.