1. செய்திகள்

Cyclone Nivar : தீவிர புயலாக மாறி சென்னையை நெருங்கும் நிவர் புயல் -120கி.மீ வேகத்தில் காற்று வீசும்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

Credit : one india

தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக (நிவர்) (Cyclone Nivar) வலுவடைந்து, அதனைத்தொடர்ந்து 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 25ம் தேதி பிற்பகலில் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையை புதுவைக்கு அருகே கரையை கடக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, இந்த புயலானது சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 590 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது மணிக்கு சுமார் 15 கிலோ மீட்டர் வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் காற்று 

இதன் காரணமாக நாளை கடலோர மாவட்டங்களில் காற்று மணிக்கு 80 லிருந்து 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையில் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும், நாளை மறுநாள் புயல் கரையை கடக்கும்போது காற்று மணிக்கு 100 லிருந்து 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 

அடுத்த 5 நாட்களுக்கு வெளுத்து வாங்கும் மழை 

இன்று (23-11-2020) நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் ஏனைய கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை (நவம்பர் 24) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும்

வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் . ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

 

நாளை மறுநாள் (நவம்பர் 25) நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ,திருவண்ணாமலை ,மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதி கன மழை பெய்யும்.

தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், செங்கல்பட்டு ,காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும்.
ஈரோடு, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


நவம்பர் 26ஆம் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்

நவம்பர் 27ஆம் தேதி தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 


மீனவர்களுக்கு எச்சரிக்கை - Fisherman Warning

இன்று முதல் வரும் 25ம் தேதி வரை தென்மேன்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் இதனால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்லவேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க..

புயல் எச்சரிக்கை : பயிர் இழப்பை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் - வேளாண் துறை!!

விவசாயிகளுக்கு முக்கிய செய்தி : கனமழை எச்சரிக்கை, உடனே பயிர் காப்பீடு செய்யுங்கள் - வேளாண்மை முதன்மைச் செயலர்!!

10,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கம் : ரூ.320 கோடி செலவில் உணவு பதப்படுத்துதல் துறையில் புதிய திட்டங்கள்!

 

English Summary: Day after tomorrow cyclone nivar landfall in between karaikal and mahabalipuram, chennai with all surrounding coastal area will get heavy rain and wind Storm

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.