Krishi Jagran Tamil
Menu Close Menu

மானியத்தில் திறந்தவெளி கிணறு அமைக்க விண்ணப்பிக்கலாம்!!

Monday, 23 November 2020 04:10 PM , by: Daisy Rose Mary

Credit :Nakkheeran

ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மானியத்தில் திறந்தவெளி கிணறு அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், திருநெல்வேலி மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2020-21 - ம் ஆண்டுக்கு விவசாய பயன்பாட்டிற்கான சமுதாய திறந்தவெளி கிணறு அமைத்தல் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தங்களது விவசாய நிலங்களில் இத்திட்டத்தின்கீழ் கிணறு அமைக்க சிறு, குறு விவசாயிக்கான சான்று, ஊரக வேலை உறுதித் திட்ட வேலை அடையாள அட்டை மற்றும் நிலவுடைமை உள்ளிட்ட இதர ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

 

நிலத்தடி நீர்மட்டம் அதிகமாக உறிஞ்சப்பட்ட அல்லது ஆபத்து நிலையில் உள்ளது என மத்திய நீர்வள ஆதார அமைப்பினால் அறிவிக்கப்பட்ட பகுதிகளிலும், மேலும் குறைவான நிலப்பரப்பினைக் கொண்ட தனிநபர் விவசாயிகளை கருத்தில் கொண்டு குறைந்தது 3 விவசாயிகள் குழுவாக இணைந்து தங்களுக்குள் நீர் பங்கீடு குறித்து மேற்கொள்ளும் உறுதியான ஒப்பந்தத்தின் அடிப்படையில் விவசாய பயன்பாட்டிற்கான சமுதாய திறந்தவெளி கிணறு ரூ.12.25 லட்சம் அரசு மானியத்தில் இத்திட்டத்தின் கீழ் அமைத்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க...


புயல் எச்சரிக்கை : பயிர் இழப்பை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் - வேளாண் துறை!!

விவசாயிகளுக்கு முக்கிய செய்தி : கனமழை எச்சரிக்கை, உடனே பயிர் காப்பீடு செய்யுங்கள் - வேளாண்மை முதன்மைச் செயலர்!!

10,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கம் : ரூ.320 கோடி செலவில் உணவு பதப்படுத்துதல் துறையில் புதிய திட்டங்கள்!

கிணறு மானியத்தில் திறந்தவெளி கிணறு Rural Work Commitment Scheme subsidy open well in subsidy
English Summary: Farmers are invited for setting up of open well in subsidy under Rural Work Commitment Scheme

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. விடைபெற்றது வடகிழக்கு பருவமழை-வானிலை மையம் தகவல்!
  2. செயல்படத் தொடங்கியது பள்ளிகள்! - தமிழகம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு : மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க அறிவுரை!
  3. எந்தவொரு பிரச்சனையுமின்றி டிராக்டர் பேரணியை நடத்துவோம்..! - விவசாயிகள் திட்டவட்டம்!
  4. விவசாயிகள் போராட்டம் : உச்ச நீதிமன்றம் அமைத்த குழு இன்று கூடுகிறது!!
  5. மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் - சிறப்பு முகாமில் பங்குபெற விவசாயிகளுக்கு அழைப்பு!
  6. பயிர்க் காப்பீடு இழப்பீடு தொகை - விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.1.12 கோடி வரவு!
  7. LIC பாலிசிதாரர்களுக்கு அருமையான சலுகை அறிவிப்பு!
  8. தமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் விளைபொருள் ஒப்பந்தச் சட்டத்தை எதிர்த்து மனு!
  9. பொது மக்களுக்கு இனிப்பான செய்தி! 30 நிமிடத்தில் சிலிண்டர் டெலிவரி!
  10. PKVY : புதிய முறையில் இயற்கை விவசாயத்திற்கு ரூ.50,000 வழங்கும் மத்திய அரசு! முழு விபரம் உள்ளே!

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.