1. செய்திகள்

உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தில் இணைய விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை வேண்டுகோள்!

KJ Staff
KJ Staff
Farmers

Credit : BBC.com

கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள், உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தில் பங்கேற்று பயனடையமாறு தோட்டக்கலை துணை இயக்குனர் இந்திரா காந்தி தெரிவித்துள்ளார்.

உழவர் அலுவலர் தொடர்பு திட்டம்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 412 கிராம பஞ்சாயத்துகளிலும் அலுவலர்கள் நேரடியாகச் சென்று விவசாயிகளை சந்திக்கும், உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் (Farmer Officer Contact Program) தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடிக்குத் (Cultivation) தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகள் மற்றும் துறை மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் மூலம் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும், சுழற்சி முறையில் (Rotational system), 15 நாட்களுக்கு ஒருமுறை உழவர்கள் மற்றும் உழவர் குழுக்களை சந்திக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதில், விவசாயிகளின் வயல்களில் செயல் விளக்கம், பயிற்சிகள் (Training) மற்றும் பண்ணைப் பள்ளிகள், சுற்றுலாக்கள் மூலம் நவீன தொழில் நுட்பங்கள் (Modern technology) மற்றும் திட்ட செயல்பாடு குறித்து எடுத்துரைக்கப்படும். வானிலை முன்னறிப்பு (Weather forecast) பற்றிய விபரங்களும் தெரிவிக்கப்படும்.

முன்னோடி விவசாயிகள்:

ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் 10 முன்னோடி விவசாயிகள் (Pioneer farmers) தேர்வு செய்து பல்வேறு உயர் தொழில்நுட்பங்கள் மற்றும் அரசு மானிய திட்டங்கள் (Government subsidy schemes) குறித்த விளக்கம் மற்றும் பயிற்சி அளிக்கப்படும். உதவி தோட்டக்கலை அலுவலர்களின் நிரந்தர பயணத்திட்டம் குறித்த விபரங்கள் விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி, வி.ஏ.ஓ., அலுவலகம், அரசு சார்ந்த அலுவலகத்தில் வைக்கப்படும்.

விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு (Crop protection) குறித்த தகவல்கள், கலந்தாய்வு பயிற்சி உள்ளிட்ட விபரங்கள் 'வாட்ஸ் ஆப்' (Whatsapp) மூலம் தெரிவிக்கப்படும். எனவே, அனைத்து விவசாயிகளும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தில் பங்கேற்று பயனடையுமாறு தோட்டக்கலை துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

மானிய விலையில் காய்கறி விதைகள்! வீட்டுத் தோட்டம் அமைத்தால், சத்தான உணவு!

காய்கறி கழிவுகளை மாடுகளுக்கு உணவாக்கும் திட்டம் - கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்!

English Summary: Department of Horticulture requests farmers to join the Farmer Officer Contact Scheme!

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.