1. செய்திகள்

15 நாட்களுக்கு பிறகு முட்டை விலை உயர்வு! முட்டை பிரியர்கள் அதிர்ச்சி!

Deiva Bindhiya
Deiva Bindhiya
Egg price increase after 15 days in Namakkal this impact seen all over tamilnadu

இன்றைய பதிவில் நாமக்கல் மற்றும் சென்னை மாவட்ட நிலவரப்படி இன்றைய முட்டை விலை எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்ப்போம். பெரும்பாலானோர் தினமும் முட்டை சாப்பிடுவார்களாக இருக்கின்றனர், அவர்களுக்கு வருத்தம் அளிக்கும், இந்த விலை ஏற்றம். இந்த மாவட்டத்தின் முட்டை கொள்முதல் விலை தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்டங்களிலும் பிரதபலிக்கும். வாங்க இன்றைய முட்டை விலையை பார்க்கலாம்.

முட்டையானது நாமக்கல் மாவட்டத்தில் தான் அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனவே, இம் மாவட்டத்தில் விலை ஏற்றம் என்பது அனைத்து மாவட்ட மக்களிடையேயும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து, ஒரு முட்டை விலை ரூ. 4.95 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை ஏற்றம் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது. அறிக:

நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, பெருந்துறை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் இயங்கி வருகின்றன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்த்து, தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவக்கின்றன. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (NECC), கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் சில்லறை விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதனை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்தும் வருகின்றனர். கடந்த செப்டம்பர் 20ம் தேதி ஒரு முட்டை விலை ரூ. 4.85 காசுகளில் இருந்து 5 காசுகள் உயர்த்தப்பட்டு, ரூ. 4.90 காசுகள் ஆனது. கடந்த 15 நாட்களாக முட்டை விலையில் மாற்றமில்லாமல் நீடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.95 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை அனைத்து பண்ணையாளர்களுக்கு தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும், என்இசிசி விலையை விட முட்டை விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டாம் எனவும், என்இசிசி மற்றும் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை ரூ.5.40, பர்வாலா ரூ.5.14, பெங்களூர் ரூ.5.35, டெல்லி ரூ.5.25, ஹைதராபாத் ரூ.5.00, மும்பை ரூ.5.60, மைசூர் ரூ.5.37, விஜயவாடா ரூ.5.26, ஹொஸ்பேட் ரூ.4.95, கொல்கத்தா ரூ.5.95.

கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.113 ஆக பிசிசியும், முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.106 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கமும் அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு!

150 விவசாயிகளின் விவசாயக் கடனை செலுத்திய இளம் தொழிலதிபர்!

English Summary: Egg price increase after 15 days in Namakkal this impact seen all over tamilnadu Published on: 07 October 2023, 03:54 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.