1. செய்திகள்

EPFO சந்தாதாரர்கள் கடகட உயர்வு: ஒரே மாதத்தில் இத்தனை லட்சம் பயனாளிகளா?

R. Balakrishnan
R. Balakrishnan
EPFO Subscribers

கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் EPFO நிறுவனத்தில் புதிதாக 16.26 லட்சம் சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். முந்தைய ஆண்டை காட்டிலும் இது 16.5% வளர்ச்சி என மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. முந்தைய அக்டோபர் மாதத்தை காட்டிலும் நவம்பர் மாதத்தில் EPFO சந்தாதாரர்களின் எண்ணிக்கை 25.67% அதிகரித்துள்ளது. நவம்பர் மாதத்தில் இணைந்த 16.26 லட்சம் சந்தாதாரர்களில் 8.99 லட்சம் பேர் EPFO வளையத்தில் முதல்முறையாக இணைந்தவர்கள்.

EPFO சந்தாதாரர்கள் (EPFO Subscribers)

புதிதாக இணைந்த 8.99 லட்சம் பேரிலும் 2.77 லட்சம் பேர் 18 முதல் 21 வயது வரம்பிலானவர்கள். அடுத்து 22 முதல் 25 வயது வரம்பிலானவர்கள் 2.32 லட்சம் பேர். ஒட்டுமொத்தமாக இணைந்த 8.99 லட்சம் புதியவர்களில் 56.60% பேர் 18 முதல் 25 வயது வரம்பிலானவர்கள். முதல்முறை வேலை தேடுவோர் ஏராளமானவர்கள் அமைப்புசார்ந்த துறைகளில் வேலைக்கு சேர்ந்துள்ளதை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இதுபோக 11.21 லட்சம் பேர் மீண்டும் EPFO உறுப்பினர்களாக இணைந்துள்ளதாகவும் மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல் வாயிலாக தெரிய வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க, தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்தின் (ESIC) கீழ் நவம்பர் மாதத்தில் மட்டும் 21,953 புதிய நிறுவனங்கள் பதிவு செய்துகொண்டுள்ளன. மேலும், 18.86 லட்சம் புதிய உறுப்பினர்கள் தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்தின் கீழ் இணைந்துள்ளனர்.

இவர்களில் 18 முதல் 25 வயது வரம்பிலானவர்கள் 8.78 லட்சம் பேர். புதிதாக 3.51 லட்சம் பெண்கள் இணைந்துள்ளனர். இதுமட்டுமல்லாமல், 63 மூன்றாம் பாலினத்தவரும் இணைந்துள்ளனர்.

மேலும் படிக்க

பங்குச்சந்தையில் சேராத ஜீவன் ஆசாத் திட்டம்: LIC-யின் புதிய அறிமுகம்!

ஒவ்வொரு மாதமும் புதிய மின் கட்டணம்? விரைவில் அமலுக்கு வரும்!

English Summary: EPFO subscribers increase: So many lakh beneficiaries in a single month? Published on: 22 January 2023, 12:51 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.