1. செய்திகள்

தமிழக அரசின் பொருளாதார ஆலோசனை குழுவில் ஐவர்!

R. Balakrishnan
R. Balakrishnan
Economical Team
Credit : Daily Thandhi

தமிழகத்தின் 16வது சட்டசபையின் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 21) கவர்னர் உரையுடன் துவங்கியது. அதில், முதல்வருக்கான பொருளாதார ஆலோசனை குழு குறித்த தகவல்களே இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பொருளாதாரம் (Economics) மற்றும் நிதிநிலை மோசமான நிலையில் இருப்பதால், இந்த குழுவின் மீது அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது. அதற்கு மற்றொரு காரணம், இதில் இடம்பெற்றுள்ள 5 பேர் தான். யார் அவர்கள்? அவர்களின் பின்னணி என்ன? என்பது குறித்து மேலும் பார்க்கலாம்.

ரகுராம் ராஜன்

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளார். இவர், இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி, இந்திய நிதியியல் சேவைத் துறையில் பல புதுமைகள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான முக்கியத்துவம் எனப் பல முக்கியப் பணிகளைச் செய்துள்ளார்.

எஸ்தர் டப்லோ

பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜியின் மனைவியும், அவருடன் இணைந்து நோபல் பரிசு (Nobel Prize) வென்றவருமான எஸ்தர் டப்லோ, புதிய பொருளாதார ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ளார். உலக நாடுகளில் இருக்கும் வறுமையைத் தீர்க்கும் வழிகளைக் கண்டறிந்ததற்கு நோபல் பரிசு பெற்றுள்ளதால், தமிழகத்தின் வறுமையை ஒழிக்க இவரின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரவிந்த் சுப்பிரமணியன்

மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன், தனது பதவியில் இருந்து விலகிய நிலையில் தற்போது தமிழக அரசு உருவாக்கியுள்ள புதிய பொருளாதார ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ளார். இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் பணியாற்றிய அனுபவம் தமிழகத்தின் பொருளாதாரத்தை மேலும் உயர்த்த உதவும் என கருதப்படுகிறது.

ஜீன் ட்ரெஸ்

இந்தியாவில் சமூக நலத்திற்காகவும், பாலின சமத்துவமின்மைக்கு எதிராகவும் பணியாற்றி வரும் ஜீன் ட்ரெஸ், பெல்ஜியம் நாட்டில் பிறந்தவராவார். இவர் அமர்தியா சென், ஆன்கஸ் டியாடன் போன்ற நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் உடன் பணியாற்றியுள்ளார். மேலும், தற்போது டில்லி ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ், ராஞ்சி பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.

எஸ்.நாராயணன்

மத்திய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலர் எஸ். நாராயணன் சுமார் 40 வருடங்களாக மத்திய, மாநில அரசுகளுடன் பணியாற்றி வருகிறார். 2003 முதல் 2004 வரையில் இந்தியப் பிரதமருக்குப் பொருளாதார ஆலோசகராக (economic advisor) இருந்தார். இதுமட்டும் அல்லாமல் நிதியமைச்சகம், வர்த்தகம் மற்றும் தொழிற்துறை, விவசாயம், பெட்ரோலியம் என 30க்கும் மேற்பட்டத் துறையில் பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தும் பணியில் பணியாற்றியுள்ளார்.

மேலும் படிக்க

விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்: தஞ்சை கலெக்டர் பேட்டி

புதிய வசதியை அறிமுகம் செய்தது வருங்கால வைப்பு நிதியகம்! 

English Summary: Five members of the Economic Advisory Committee of the Government of Tamil Nadu! Published on: 21 June 2021, 07:41 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.