1. செய்திகள்

பருத்தியில் மர்ம நோய் தாக்குதல்! நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை!

R. Balakrishnan
R. Balakrishnan
Cotton Cultivation

சீர்காழி வட்டாரத்தில் பருத்தி செடிகளில் மர்ம நோய் தாக்கி உள்ளது. இதனை சாி செய்ய வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

மர்ம நோய் தாக்குதல்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டார பகுதிகளான திருவெண்காடு, நெப்பத்தூர், அகனி, திருவாலி, சின்ன பெருந்தோட்டம், பெருந்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் தற்போது பருத்தி சாகுபடி (Cotton Cultivation) செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட கிராமங்களில் பருத்தி காய் முற்றி பருத்தி வெடித்துள்ளது.

இதனால் பஞ்சு எடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு பருத்தி சாகுபடியில் விவசாயிகள் லாபம் கிடைக்கும் என்று எண்ணிய நிலையில், கடந்த சில நாட்களாக பருத்தி செடியில் திடீரென மர்ம நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பருத்தி செடிகள் காய்ந்து பருத்தி காய்கள் அதிக அளவில் கீழே உதிர்ந்து வருகிறது.

நடவடிக்கை தேவை

இதுகுறித்து நெப்பத்தூரை சேர்ந்த விவசாயி ரகுராமன் கூறுகையில், இந்த ஆண்டு பருத்தி சாகுபடியில், ஈடுபட்டுள்ள விவசாயிகள், தற்போது பஞ்சு விலை அதிகரித்து காணப்படுவதால், மிகவும் மகிழ்ச்சி அடைந்த நிலையில், கடந்த சில நாட்களாக பருத்தி செடியில் திடீரென தாக்கி வரும் மர்ம நோயால், செடிகள் காய்ந்தும், காய்கள் உதிர்ந்தும் வருகின்றன. இந்த நோயை கட்டுப்படுத்த (Control) எந்தவிதமான மருந்து தெளிக்க வேண்டும் என தெரியாமல் தவித்து வருகிறோம்.

எனவே வேளாண்மை துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்க வேண்டுகிறேன். கடந்த சில நாட்களாக விவசாயிகள் தங்கள் வயல்களில் பருத்தி பஞ்சு எடுத்து வரும் நிலையில், கிலோ ரூ.62 வரை விலை போவதால், இந்த ஆண்டு லாபம் கிடைக்கும் என நினைத்திருந்த வேளையில், பருத்தி செடிகளில் மர்ம நோய் தாக்கி வருவது மனவேதனை அளிக்கிறது.

மேலும் படிக்க

தர்பூசணி விற்பனை செய்ய முடியவில்லை: வயலுக்கே உரமாகும் அவல நிலை!

வேளாண்துறையின் முழுமையான வழிகாட்டுதல் இருந்தால் காய்கறிகள் வீணாகாது!

English Summary: Mysterious disease attack on cotton! Farmers demand action!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.