1. செய்திகள்

முழு ஊரடங்கு: 16 சிறப்பு ரயில்கள் ரத்து!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Full Lockdown: 16 special trains cancelled!

Credit : India TV

தமிழகத்தில் 7 மாதங்களுக்குப் பிறகு, ஞூயிறு முழு ஊரடங்கு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதால், 16 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கட்டுப்பாடுகள் (Restrictions)

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நாள்தோறும் புதுப்புது உச்சங்களை எட்டி வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

முழு ஊரடங்கு (Full curfew)

அந்த வகையில் கடந்த சில தினங்களாக இரவுநேர ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

சிறப்பு ரயில்கள் ரத்து (Special trains canceled)

அந்தவகையில் தமிழ்நாட்டில் கடந்த ஏழு மாதங்களுக்குப் பின்னர் முழு ஊரடங்கு இன்று இரவு 10 மணி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. 30 மணி நேரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் 16 சிறப்பு ரயில்கள் இயங்காது என தெற்கு ரயில் அறிவித்துள்ளது.

இதன்படி

  • மதுரை கோட்டத்திலிருந்து இயக்கப்படும், திருச்சி - காரைக்குடி சிறப்பு ரயில், மதுரை - விழுப்புரம் சிறப்பு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • சென்னை - புதுச்சேரி , திருச்சி - கரூர் வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

  • முழு ஊரடங்கு நாளான நாளை (ஏப்ரல் 25) ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு நிலையங்கள் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைகள் திறக்கப்படாது (Shops will not be open)

அதே போல் நாளை பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்சிகள் இயங்காது. மளிகைக்கடைகள் திறக்கப்படாது. உணவகங்களில் குறிப்பிட்ட நேரத்தில் பார்சல் மட்டும் வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க...

7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேப் பேருந்து சேவை- தமிழக முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத்துறை அறிவிப்பு!

கொரோனா 2வது அலை : ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு நோய் தொற்று உறுதி!

English Summary: Full Lockdown: 16 special trains canceled!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.