1. செய்திகள்

நெருங்கிய தேர்தல்- சிலிண்டர் விலை அதிரடியாக குறைப்பு!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan

commercial and FTL cylinder price cut

எரிபொருள் விற்பனை நிலையங்கள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எல்பிஜி சிலிண்டர்களின் விலையை மாற்றியமைக்கும் நிலையில், ஏப்ரல் மாதத்தின் முதல் நாளான இன்று வணிக ரீதியான சிலிண்டரின் விலையினை ரூ.30.50 வரை குறைத்துள்ளன. இரண்டு மாதங்களாக அதிகரித்து வந்த சிலிண்டரின் விலை தேர்தல் நெருங்கும் நேரத்தில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் வீடுகளில் பயன்படுத்தப்படும் உள்நாட்டு 14.2 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மேலும், 5 கிலோ எடையுள்ள FTL சிலிண்டர்களின் விலை ₹7.50 குறைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய விலை நிலவரம்:

சமீபத்திய விலை குறைப்பின் படி, டெல்லியில் 19 கிலோ வணிக எரிவாயு சிலிண்டரின் சில்லறை விலை ₹1,764.50 ஆக உள்ளது. மும்பையில் இன்று முதல் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ₹1,718.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சென்னை மற்றும் கொல்கத்தாவில், வணிக ரீதியான எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலை முறையே ₹1,929.5 மற்றும் ₹1,880.50 ஆக விற்கப்படுகிறது.

நெருங்கும் தேர்தல்- குறைந்தது சிலிண்டர் விலை:

இந்தியா முழுவதும் 7 கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைப்பெற உள்ளது. அதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிலிண்டர் விலை குறைந்துள்ளது. முன்னதாக இந்தாண்டு வணிக எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 2 மாதங்களாக உயர்த்தின. முன்னதாக பிப்ரவரி 1 ஆம் தேதி, 19 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ₹14 வரை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரியில், 19 கிலோ கேஸ் சிலிண்டரின் விலை முறையே ₹1,769.50 (டெல்லி), ₹1,887 (கொல்கத்தா), ₹1,723 (மும்பை), மற்றும் ₹1,937 (சென்னை) ஆக இருந்தது.

எண்ணெய் நிறுவனங்கள் வணிக எரிவாயு சிலிண்டர் விலையை 1 டிசம்பர் 2023 அன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ₹21 வரை உயர்த்தின. அதன் பின்னர், 2024 புத்தாண்டுக்கு முன்னதாக, 19 கிலோ வணிக சமையல் எரிவாயுவின் விலை சிலிண்டருக்கு ₹39.50 வரை குறைக்கப்பட்டது.

வீட்டு சிலிண்டர்களின் விலை என்ன?

14.2 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதன் விலை கடைசியாக ஆகஸ்ட் 30, 2023 அன்று மாற்றப்பட்டது. உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர் விலையானது சென்னையில் ரூ.818.50-க்கு கிடைக்கும். முன்னதாக மகளிர் தினத்தையொட்டி வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டரின் விலையில் ரூபாய் 100 குறைக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மாநில அரசு விதிக்கும் வரிகள் காரணமாக உள்நாட்டு சமையல் எரிவாயுவின் விலைகள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாறுபடுகிறது. விலை நிர்ணயம் அந்நிய செலாவணி விகிதங்கள், கச்சா எண்ணெய் விலை போன்ற பல காரணிகளைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் குறிப்பிடுகின்றனர்.

Read more:

Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன?

இனச்சேர்க்கைக்கு சரியான காளைகளை தேர்வு செய்வது எப்படி?

English Summary: Good news commercial and FTL cylinder price cut all over india from today

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.