1. செய்திகள்

விவசாயிகள் நற்செய்தி! 300 குடும்பங்களுக்கு 600 தென்னங்கன்றுகள்

T. Vigneshwaran
T. Vigneshwaran
Coconut Saplings

வளர்ச்சித் திட்டமானது பல்வேறு ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டமானது அண்ணா கிராம மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராம ஊராட்சிகளில் பல்வேறு துறைகளின் மூலம் மானியத் திட்டங்கள் ஒரே ஊராட்சிகளில் நடைமுறைபடுத்திட ஏதுவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

இத்திட்டத்தின் கீழ், தரிசு நிலங்கள் 10 முதல்15 ஏக்கர் தொகுப்பாக இருக்கும் பட்சத்தில் விளைநிலமாக மாற்றுவதை ஊக்குவித்தல், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரக்கன்றுகள் வழங்குதல், தென்னங்கன்று வழங்குதல், திரவ உயிர் உரம் விநியோகம், விசைத் தெளிப்பான் விநியோகம் மற்றும் இதர வேளாண் - உழவர் நலத்துறை மானியத் திட்டங்களும் இப்பகுதியைச் சார்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து வழங்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரியபெரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஒரு குடும்பத்திற்க்கு இரண்டு தென்னங்கன்றுகள் வீதம் 300 குடும்பங்களுக்கு 600 தென்னங்கன்றுகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை, காஞ்சிபுரம் ஒன்றிய குழுத் தலைவர் மலர்கொடி குமார் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நித்யா சுகுமார் ஆகியோர் தொடங்கிவைத்து பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கினர்.

மேலும், தென்னங்கன்று நடுதல் மற்றும் பராமரிப்பு குறித்த தொழில்நுட்பத்தை விளக்கும் துண்டு பிரசுரங்களும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ்,ஊராட்சி மன்ற தலைவர், வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க:

ஒருமுறை விவசாயம் செய்து 70 ஆண்டுகள் வரை சம்பாதிக்க முடியும்

ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை யார் யாருக்கு கிடைக்கும்?

English Summary: Good news for farmers! 600 coconut saplings for 300 families Published on: 27 March 2023, 07:44 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.