1. செய்திகள்

இந்தியாவில் மூத்த குடிமக்கள் எண்ணிக்கை இத்தனை கோடியா? மத்திய அரசு தகவல்!

R. Balakrishnan
R. Balakrishnan
Senior citizens

இந்தியாவில் 60 வயதை தாண்டியவர்கள் சீனியர் சிட்டிசன்கள் (Senior Citizen) என அழைக்கப்படுகின்றனர். மேலும் 80 வயதை தாண்டியவர்கள் மிகவும் சீனியர் சிட்டிசன்கள் (Very Senior Citizen) என அழைக்கப்படுகின்றனர்.

சீனியர் சிட்டிசன்கள் (Senior citizens)

சீனியர் சிட்டிசன்களுக்கென பிரத்யேகமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சீனியர் சிட்டிசன்களின் வாழ்வை எளிதாக்கவும் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. மேலும், இந்தியாவில் சீனியர் சிட்டிசன்களின் எண்ணிக்கையை கணக்கிட வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் உள்ள சீனியர் சிட்டிசன்களின் எண்ணிக்கை குறித்து தெரிந்துகொள்ள அரசு ஏதும் கணக்கெடுப்பு நடத்தியுள்ளதா என நாடாளுமன்றத்தில் ராகுல் கஸ்வான் எம்.பி கேள்வி எழுப்பி இருந்தார். மேலும், எத்தனை சீனியர் சிட்டிசன்கள் பாதுகாப்பில்லாத வாழ்க்கை வாழ்கின்றனர் எனவும், சீனியர் சிட்டிசன்களுக்கு சீனியர் சிட்டிசன் கார்டு வழங்க அரசுக்கு திட்டம் இருக்கிறதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் பிரதிமா பவுமிக் அளித்த பதிலில், “2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் உள்ள சீனியர் சிட்டிசன்களின் எண்ணிக்கை 10.38 கோடி ரூபாய். சீனியர் சிட்டிசன்கள் விளிம்புநிலை பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் சவால்களும், ஆபத்துகளையும் சந்திக்கின்றனர்.

தேசிய குற்றப் பதிவாணையம் 2021ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையிம்படி, 2021ஆம் ஆண்டில் சீனியர் சிட்டிசன்களுக்கு எதிராக 26,100 குற்றங்கள் நடந்துள்ளன. சம்பந்தப்பட்ட மாநிலங்களின் காவல்துறையினர் இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். சீனியர் சிட்டிசன்களுக்கு இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் சீனியர் சிட்டிசன் அட்டை வழங்கப்படுவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

பொங்கல் பரிசு எவ்வளவு ரூபாய் தரப் போறாங்க? பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பு!

ஆன்லைன் கடன் மோசடி: தீவிர நடவடிக்கையில் மத்திய அரசு!

English Summary: How many crores are the senior citizens in India? Central government information! Published on: 21 December 2022, 07:32 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.