1. செய்திகள்

ஆதார் விவரத்தைப் பாதுகாக்கும் மாஸ்க்டு ஆதாரை டவுன்லோட் செய்வது எப்படி?

Poonguzhali R
Poonguzhali R
How to Download The Masked Aadhar?

இன்றைய டிஜிட்டல் மயமாக்கப்பட்ட காலத்தில் அனைத்துப் பணிகளுக்கும் ஆதார் கார்டு என்பது மிகவும் அவசியமாகிறது. அத்தகைய ஆதார் விவரங்களை அனைத்து இடங்களிலும் பகிர வேண்டாம் என அரசு சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. அந்த வகையில் ஆதாரைப் பாதிகாக்கும் மாஸ்க் ஆதாரை பதிவிறக்கம் செய்வது எப்படி? என்பதைக் குறித்துதான் இப்பதிவில் பார்க்கப் போகிறோம்.

இன்றைய டிஜிட்டல் மயமாக்கப்பட்ட காலத்தில் அனைத்துப் பணிகளுக்கும் ஆதார் கார்டு என்பது மிகவும் அவசியமாகிறது. நம் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது முதல் அவர்களுக்கு வங்கிக்கணக்குத் தொடங்குவது வரை அனைத்துச் செயல்களுக்கும் ஆதார் கார்டு என்பது அவசியமாகிறது.

மேலும் படிக்க: 2 ரூபாயில் ரூ. 36,000 பென்ஷன் பெறும் மத்திய அரசின் திட்டம்!

அரசின் சலுகைகள், சமூக நீதித்திட்டங்கள் என அனைத்தையும் பெறுவதற்கு ஆதார் கார்டு அவசியம். இந்த நிலையில், யுஐடிஏஐ அமைப்பு வழங்கியுள்ள ஆதார் கார்டினுள் இருக்கும் 12 இலக்க எண் நம் ஒவ்வொருவருக்கும் எந்தளவுக்கு முக்கியம் என்பதைப் பலரும் யோசிக்க மறந்துவிடுகிறோம்.

மேலும் படிக்க: பெண்களுக்காக அரசு கொடுக்கும் சிறப்புக் கடன்கள்: இன்றே அப்ளை பண்ணுங்க!

நம் ஆதாரின் இந்த 12 இலக்க எண்ணை வைத்து அவருக்கேத் தெரியாமல் வங்கிக்கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியும். ஆதலால், ஆதார் கார்டில் இருக்கும் 12 இலக்க எண் என்பது நமக்கு மிகவும் முக்கியமானது.

மேலும் படிக்க: முதியோருக்குக் கட்டணமில்லா பஸ் பாஸ்-ஐ பெறத் தேதி அறிவிப்பு!

இத்தகைய ஆதார் எண்ணினை எந்தக் காரணத்தைக் கொண்டும் யாரிடமும் பகிர்தல் கூடாது எனக் கூறப்படுகிறது. எனவே, ஆதார் எண்ணைப் பாதுகாப்பாக வைக்க வேண்டி மத்திய அரசு மாஸ்க்ஆதாரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாஸ்க் ஆதாரில் நம் ஆதார் எண்களில் உள்ள கடைசி 4 எண்கள் மட்டுமே வெளியில் தெரியும். எஞ்சியவை பாதிகாப்பாக வைக்கப்படும்.

மேலும் படிக்க: TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான புதிய விதிமுறைகள் இதோ!

இந்த மாஸ்க்டுஆதாரை யுஐடிஏஐ இணையதளத்திற்குச் சென்று எளிதில் பதிவிறக்கம் செய்து, பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் ஆதார் எண் அனைத்தையும் அளிக்க விரும்பாவிட்டால், இந்த மாஸ்க்டு ஆதாரைப் பயன்படுத்தலாம். இந்த மாஸ்க்டு ஆதார் கார்டினை அரசின் எல்லா துறைகளும் ஏற்றுக் கொள்ளும். அதோடு, அரசால் வழங்கப்படுகின்ற அனைத்துச் சமூக நலத்திட்டங்களைப் பெறுவதற்கும் இதைப் பயன்படுத்த முடியும் எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை! புதிய விலை நிலவரம்!

சமீபக் காலத்தில் யுஐடிஏஐ அமைப்பு ட்விட்டரில் பதிவிட்ட செய்தியி்ல் “ நீங்கள் உங்கள் ஆதார் எண் அனைத்தையும் வெளியிட விரும்பாவிட்டால், விஐடி அல்லது மாஸ்க்டு ஆதாரை பயன்படுத்தலாம். இது நாடுமுழுவதும் அரசு சார்பில் இது ஏற்கப்படும். மாஸ்க்டு ஆதாரைப் myaadhaar.uidai.gov.in/genricDownloadAadhaar என்ற இணையதளத்தில் பெறலாம்” என அறிவிப்பைத் தந்தது.

மேலும் படிக்க: DA Hike: அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்ந்தது!!

மாஸ்க்டு ஆதாரை எப்படி பதிவிறக்கம் செய்வது?

  • https://eaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அங்கு 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிடுதல் வேண்டும்.
  • அடுத்ததாக, மாஸ்க்டு ஆதார் தேவை என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் பேக்சா வெரிபிகேசன் என்பதைப் பதிவிட வேண்டும்.
  • அதன்பிறகு, ஓடிபி எண் பட்டனை அழுத்துதல் வேண்டும்.
  • இறுதியாக, ஆதாரில் பதிவிடப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஓடிபி வரும்.
  • அந்த ஓடிபி எண்ணைப் பதிவிட்டு மாஸ்க்டு ஆதாரை பதவிறக்கம் செய்யலாம்.

மேலும் படிக்க

SI தேர்வு எழுதுவோருக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு?

பொறியியல் கலந்தாய்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் உள்ளே!

English Summary: How to Download The Masked Aadhar that protects the source profile Published on: 20 June 2022, 04:09 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.