1. செய்திகள்

HPCL 2022: டெக்னீஷியன் வேலைக்கு ரூ.76,000/- சம்பளம், 150+ காலியிடங்கள்!

Poonguzhali R
Poonguzhali R
HPCL 2022: Salary for Technician Job, 150+ Vacancies!

HPCL 2022: ஆபரேஷன் டெக்னீஷியன்- 94 காலியிடங்களும், பராமரிப்பு தொழில்நுட்ப வல்லுநர் - 40 காலியிடங்களும், ஜூனியர் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர் - 18 காலியிடங்களும், பாய்லர் டெக்னீஷியன்-18 காலியிடங்களும், ஆய்வக ஆய்வாளர்- 16 காலியிடங்களும் உள்ளன.

HPCL 2022: கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் பொருத்தமான துறைகளில் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அனைத்துத் தகுதிகளும் மாநில வாரியம் அல்லது பிற பொருத்தமான அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட முழுநேர, வழக்கமான படிப்புகளாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர் 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆண்டுகள்.

HPCL 2022: தேர்வு நடைமுறை: விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். கணினி அடிப்படையிலான தேர்வில் பொதுத் திறன் தேர்வு, தொழில்நுட்பம் / தொழில்முறை அறிவுத் தேர்வு ஆகியவை அடங்கும். CBT பெரும்பாலும் இந்தியா முழுவதும் 22 நகரங்களில் நடைபெறும். CBT- தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் பின்னர் திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாக படித்தல் வேண்டும்.


அதிகாரப் பூர்வ அறிவிப்பு இணைப்பு.

HPCL 2022: விண்ணப்பக் கட்டணம்: UR, OBC-NC மற்றும் EWS விண்ணப்பதாரர்கள் திரும்பப்பெறாத கட்டணமாக ரூ. 590/- மற்றும் ஏதேனும் பேமெண்ட் கேட்வே கட்டணங்கள் (இதில் ஜிஎஸ்டி @ 18% அடங்கும்). SC, ST மற்றும் PwBD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

HPCL 2022க்கு எப்படி விண்ணப்பிப்பது?: பதவிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும்.

  • தளத்தில் உள்ள தொழில் பிரிவைத் தேர்ந்தெடுத்து வேலை வாய்ப்பு எனும் நிலைபாட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
  • தேவையான அனைத்து சான்றுகளையும் சேர்த்து, படிவத்தை நிரப்பவும்.
  • தேவையான ஆவணங்களைப் பதிவேற்றிப் பதிவுக் கட்டணத்தைச் செலுத்தவும்.
  • எதிர்காலப் பயன்பாட்டுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் ஸ்கிரீன்ஷாட்டை எடுக்கவும்.

அதிகரப்பர்வ அறிவிப்பின் இணைப்பு

மேலும் படிக்க

TCS 2022: TCS பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்! முன் அனுபவம் தேவையில்லை!!

ICAR 2022: மாதம் ரூ. 60000 சம்பளத்தில் வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை!

English Summary: HPCL 2022: Rs. 76,000 / - Salary for Technician Job, 150+ Vacancies! Published on: 24 April 2022, 12:11 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.