1. செய்திகள்

சேலம், புதுச்சேரி உட்பட 38 நகரங்களில் வேலை: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி பிஓ (IBPS RRB PO) 2019 தேர்வுக்கான அறிவிப்பு

KJ Staff
KJ Staff

பொதுத்துறை வங்கிகளில் ஐபிபிஎஸ் அமைப்பு ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி பிஓ 2019 (IBPS RRB PO 2019) தேர்வுக்கான அறிவிப்பை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. சேலம், புதுச்சேரி உட்பட 38 நகரங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. முக்கிய தேதிகள் மற்றும் பனி விவரங்கள் கீழ் குறிப்புட்டுள்ளன.

விண்ணப்பிக்கும் நாட்கள்: 2019 ஜூன் 18 முதல் ஜூலை 4 வரை.

தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: ஜூலை 4, 2019

தேர்வு நடைபெறும் நாட்கள்

ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி பிஓ 2019 தேர்வின் முதல் நிலைத் தேர்வு இந்த ஆண்டு ஆகஸ்ட் 3, 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனக் கூறப்பட்டிருந்தது. மேலும் பிரதானத் தேர்வு செப்டம்பர் 22 ஆம் தேதி நடக்கும் என எதிர்பார்க்க படுகிறது..

இந்த ஆண்டு ஸ்கேல் II மற்றும் ஸ்கேல் III ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி அதிகாரிகளைத் தேர்வு செய்ய ஒரே தேர்வு செப்டம்பர் 22, 2019 அன்று நடைபெறுவதாகக் கூறப்பட்டுள்ளது.

ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி அலுவலக உதவியாளர் தேர்வுக்கான முதல் நிலைத் தேர்வு இந்த ஆண்டு ஆகஸ்ட் 17, 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடக்கும் எனவும் பிரதானத் தேர்வு செப்டம்பர் 29, 2019 அன்று நடக்கும்.

குரூப் ஏ பிரிவு (ஸ்கேல் I, II மற்றும் III) அதிகாரிகளுக்கான நேர்முகத் தேர்வு நபார்டு வங்கியுடன் இணைந்து நடத்தப்படும். இது உத்தேசமாக நவம்பர் 2019ல் இருக்கலாம். பணி நியமனம் ஜனவரி 2020ல் நடைபெறும்.

காலி பணியிடங்கள்: 10,190

ஸ்கேல் I அதிகாரி பணி - 3312

ஸ்கேல் II அதிகாரி பணி - 1469

ஸ்கேல் III அதிகாரி பணி - 160

அலுவலக உதவியாளர் பணி – 5249

வயது வரம்பு

அலுவலக உதவியாளர் பணிக்கு 18 வயது முதல் 28 வயது வரை இருக்க வேண்டும். 02.06.1991 க்கு முன்போ 01.06.2001 க்குப் பின்போ பிறந்திருக்கக் கூடாது.

ஸ்கேல் I அதிகாரி பணிக்கு 18 வயது முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். 03.06.1989 க்கு முன்போ 31.05.2001 க்குப் பின்போ பிறந்திருக்கக் கூடாது.

ஸ்கேல் II அதிகாரி பணிக்கு 21 வயது முதல் 32 வயது வரை இருக்க வேண்டும். 03.06.1987 க்கு முன்போ 31.05.1998 க்குப் பின்போ பிறந்திருக்கக் கூடாது.

ஸ்கேல் III அதிகாரி பணிக்கு 21 வயது முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். 03.06.1979 க்கு முன்போ 31.05.1998 க்குப் பின்போ பிறந்திருக்கக் கூடாது.

வயது வரம்பு தளர்வு

எஸ்சி(SC), எஸ்.டி(ST). பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி(OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு (PHYSICALLY CHALLENGED) 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி மற்றும் முன் அனுபவம்

Treasury Manager, Marketing Officer, Law Officer, Chartered Accountant, Agricultural Officer, Information Technology Officer, General Banking Officer உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மற்றும் முன் அனுபவத் தேவை மாறுபடுகிறது.

தேர்வுக் கட்டணம்

ஸ்கேல் I, II மற்றும் III அதிகாரிகள் பணிக்கு விண்ணப்பிக்கும்  எஸ்.சி, எஸ்.டி, பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.100 கட்டணம். மற்றவர்களுக்கு கட்டணம் ரூ.600.

அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் எஸ்.சி, எஸ்.டி, பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ரூ.100 கட்டணம். மற்றவர்களுக்கு கட்டணம் ரூ.600.

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும். 

https://bit.ly/2XVDlYs

https://www.ibps.in/wp-content/uploads/CRP_RRB_VIII_ADVT_15_06_2019.pdf

https://www.google.com/search?q=(IBPS+RRB+PO+2019&rlz=1C1NHXL_enIN842IN842&oq=(IBPS+RRB+PO+2019&aqs=chrome..69i57.15768j0j9&sourceid=chrome&ie=UTF-8

K.SAKTHIRPIYA 

KRISHI JAGRAN 

English Summary: IBPS RRB PO 2019 recruitment notification: salem, pondichery and other 38 places Published on: 17 June 2019, 04:42 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.