1. செய்திகள்

முக்கிய அறிவிப்பு: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000

T. Vigneshwaran
T. Vigneshwaran
தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்துக்கான தரவுகளைச் சேகரிக்கும் பணிகள் தற்போது முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன.

இலவசம், மானியம் ஆகியவை வளர்ச்சிக்கு உதவுமா அல்லது தடுக்குமா? என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் சார்பில் நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார்.

“தமிழ்நாடு அரசு கல்வி, சுகாதாரம், விவசாயம், போக்குவரத்து உட்பட பல்வேறு துறைகளில் விலையில்லா நலத்திட்டங்கள், மானிய நிதியுதவிகள் வழங்கி வருகிறது.

அவற்றை வளர்ச்சிக்கு தடையானவையாக எண்ணாமல் சமூக மேம்பாட்டுக்கான முதலீடாகவே அணுக வேண்டும். விலையில்லா திட்டங்களை எதிர்ப்பவர்கள் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கும்போது அமைதியாக இருக்கிறார்கள். ஏனெனில், இந்த சமூகத்தில் அனைவருக்குமான தேவைகள் வேறுபடுகின்றன. அவற்றை நிறைவேற்ற வேண்டியது நல்ல அரசின் கடமை ஆகும்.

தனக்கு தேவையில்லை என்பதற்காக மற்றவர்களுக்கு பயன்படும் திட்டங்களை புறக்கணிக்கக்கூடாது. சமூக கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை ஒருசேர மேம்படுத்துவது அவசியம். அதற்கான பணிகளையே அரசு செய்கிறது. அதேநேரம் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் நன்னடராகவே உள்ளது.

போக்குவரத்து நெரிசல், பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணங்களை சிந்தித்து மகளிருக்கான 50 சதவீத மானிய இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் நிருத்திவைக்கப்பட்டது. அதற்கு பதிலாகவே அரசு பேருந்துகளில் அவர்களுக்கு இலவச பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டது என்று கூறினார்.

மேலும் “குடும்ப தலைவர்களுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் நிச்சயமாக செயல்படுத்தப்படும் என்றும் அதற்கான தரவுகளைச் சேகரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், “கிராமப்புற பெண்கள் பலர் உடல்நலக்குறைவால் பலவீனமடைந்துள்ளனர். அவர்களுக்கு மிக்சி, கிரைண்டர் போன்ற பணிச்சுமையை குறைக்கும் உபகரணங்கள் தேவை, ஆனால், தமிழகத்தில் சில மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் வாஷிங் மெஷின் போன்ற பொருட்களை வழங்க இயலாது. எனவே, ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது யாரெல்லாம் பயனாளிகள் என்று அரசு ஆய்வு செய்ய வேண்டும். நலத்திட்டங்கள் தவறான புள்ளிவிவரங்களால் மக்களிடம் முழுமையாக சென்றடைவதில்லை.

அந்த வகையில் இதற்கு முந்தைய ஆட்சியில் பயிர்கடன், நகைகடன் தள்ளுபடி போன்றவற்றில் தவறான தரவுகளால் பல குழப்பங்கள் ஏற்பட்டது.  நலத்திட்டங்களை செயல்படுத்துதற்கான தரவுகளை மத்திய அரசின் ஆதார் திட்டத்தில் இருந்து முழுமையாக பெறுவது கடினம்.

மேலும், ஆதாரில் கைரேகை உட்பட பல்வேறு போலியான ஆவணங்கள் இருப்பதால் அரசின் திட்டங்கள் பயனாளிகளுக்கு முழுமையாக செல்வதை உறுதி செய்வதில் சிரமங்கள் உள்ளன. தகவல் மேம்பாடு தான் நலத்திட்டங்களை முழுமைப்படுத்தும் என்று கூறினார்.

மேலும் படிக்க:

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000? விவரம் இதோ !

பெண்களுக்கு ரூ. 1000 விரைவில்! முடிந்தது காத்திருப்பு!

English Summary: Important Notice: Rs.1000 per month for family heads Published on: 28 October 2021, 11:34 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.