1. செய்திகள்

42 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி- எந்த கிராமத்தில், எந்த ஏரி? முழுப்பட்டியல் இதோ

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
In Dharmapuri district, 42 lakes were allowed to take soil from April

வரும் ஏப்ரல்-2023 முதல் வாரத்திலிருந்து தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மற்றும் நீர்வள துறையின் கட்டுபாட்டில் உள்ள 42 ஏரிகளில் விவசாய பயன்பாட்டிற்கு இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட உள்ளது.

தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மற்றும் நீர்வள துறையின் கட்டுபாட்டில் உள்ள 42 ஏரிகளில் விவசாய பயன்பாட்டிற்கு இலவசமாக வரும் ஏப்ரல் முதல் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட உள்ளதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தகவல் தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிறது என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நிலையில், மண் எடுக்கும் ஏரிகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-

வ.எண் வட்டங்கள் ஏரியின் பெயர் கிராமம்
1 பொன்னகரம் மரவத்திபள்ளம் ஏரி சுஞ்சல் நத்தம்
2 பள்ளிப்பட்டி ஏரி பெரும்பாலை
3 வத்திமரதஅள்ளி ஏரி பனைகுளம்
4 வானதி ஏரி பனைகுளம்
5 சித்தாரஅள்ளி ஏரி பனைகுளம்
6 கரியப்பனஅள்ளி குட்டை  கரியப்பனஅள்ளி
7 திப்பராசன் குட்டை கிட்டனஅள்ளி
8 ஏரங்காட்டு ஏரி குட்டை சஜ்ஜலஅள்ளி
9 கெம்மன் குட்டை பளிஞ்சரஅள்ளி
10 நல்லாம்பட்டி ஏரி நல்லாம்பட்டி
11 பள்ளிப்பட்டி மேல் ஏரி பள்ளிப்பட்டி
12 பெரியூர் ஏரி பெரியூர்
13 தருமபுரி அன்னசாகரம் ஏரி அன்னசாகரம்
14 குருபரஅள்ளி ஏரி குப்பூர்
15 குப்பூர் குருமன் குட்டை குப்பூர்
16 சத்திரம் ஏரி குப்பூர்
17 ஆலங்கரை ஏரி குப்பூர்
18 புது ஏரி எம்.ஒட்டப்பட்டி
19 மாரவாடி ஏரி மாரவாடி
20 நல்லம்பள்ளி மாதேமங்கலம் ஏரி மாதேமங்கலம்
21 அதியமான் கோட்டை ஏரி  அதியமான் கோட்டை
22 இலளிகம் ஏரி  இலளிகம்
23 ஏலகிரி பெரிய ஏரி ஏலகிரி
24 சின்ன ஏரி மானியத அள்ளி
25 புட்டன் கொட்டாய் ஏரி பொடாரன்கொட்டாய்
26 சேசம்பட்டி ஏரி சேசம்பட்டி
27 பாப்பன் குட்டை பாகலஅள்ளி
28 பளையதாதனூர் ஏரி பளையதானூர்
29 கொமத்தம்பட்டி ஏரி கொமத்தம்பட்டி
30 பொம்மசமுத்திரம் ஏரி  பொம்மசமுத்திரம்
31 பள்ளப்பட்டி ஏரி பள்ளப்பட்டி
32 காரிமங்கலம் ஜோதிப்பட்டி ஏரி (கோவில் ஏரி) ஜோதிப்பட்டி
33 மோட்டூர் ஏரி சுண்ணம்பட்டி
34 அரூர் பாப்பன் ஏரி கொத்தனம்பட்டி
35 மோட்டுகரிச்சி ஏரி வடுகப்பட்டி
36 கவுண்டன் குட்டை  கீரைப்பட்டி
37 கொளகன் ஏரி கூடலூர்
38 மயிளன் ஏரி கம்மாலப்பட்டி
39 ஒடசல்பட்டி ஏரி ஒடசல்பட்டி
40 கடத்தூர் கட்டையன் ஏரி அம்பாளப்பட்டி சேரி
41 பெரிய ஏரி கோபிசெட்டிபாளையம்
42 கோட்ரப்பட்டி ஏரி (பூலப்பநாய்க்கன் ஏரி) கோட்ரப்பட்டி

விவசாய நிலத்தை மேம்படுத்த வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகளின் வசிப்பிடம், விவசாய நிலம் அல்லது வண்டல் மண் எடுக்கப்பட வேண்டிய ஏரி அதே வருவாய் கிராமம் அல்லது அருகில் உள்ள வருவாய் கிராமத்தின் எல்லை வரம்பிற்குள் அமைத்திருக்க வேண்டும்.வண்டல் மண் எடுக்க விருப்பமுள்ள விவசாயிகள் உரிய விண்ணப்ப படிவத்தினை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலக மூலம் பெற்று சிட்டா மற்றும் அடங்கல் ஆவணங்களுடன் கிராம நிர்வாக அலுவலர் சான்று பெற்று சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வரும் திங்கள் முதல் (20.03.2023) விண்ணப்பத்தினை சமர்ப்பித்திட தெரிவிக்கப்படுகிறது.

விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஆய்வு செய்து அதிகபட்சமாக நஞ்சை நிலமாக இருப்பின் ஏக்கர் ஒன்றிக்கு 75 கன மீட்டரும், புஞ்சை நிலமாக இருப்பின் ஏக்கர் ஒன்றிக்கு 90 கன மீட்டரும் வண்டல் மண் இலவசமாக எடுக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

விவசாய நிலங்களுக்கு என வழங்கப்படும் வண்டல் மண் பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது. மேலும் பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது தெரியவந்தால் அனுமதியினை ரத்து செய்வதுடன் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் காண்க:

வனத்துறையில் என்ன புதிய திட்டங்களை கொண்டு வரலாம்? அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

பெண்களுக்காக “அவள்” என்கிற புதிய திட்டத்தை தொடங்கிய முதல்வர்- திட்டத்தின் நோக்கம் என்ன?

English Summary: In Dharmapuri district, 42 lakes were allowed to take soil from April Published on: 18 March 2023, 10:54 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.