1. செய்திகள்

100 நாள் வேலைத் திட்டம்: ஏப்ரல் 1 முதல் மாநிலம் வாரியாக ஊதிய உயர்வு

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
MGNREGA scheme State wise wage hike

ஊரக பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒன்றிய அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியத்தினை மாநிலம் வாரியாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வழங்கப்படும் தினசரி ஊதியத்தில் ரூ.25 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் எவ்வளவு ஊதிய உயர்வு போன்ற விவரங்கள் பின்வருமாறு-

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இயற்றப்பட்டு 2006 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இன்றளவு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS) கிராமப்புறங்களிலுள்ள மக்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் முக்கியத் திட்டமாக கருதப்படுகிறது.

மாநிலம் வாரியாக ஊதிய உயர்வு:

இந்நிலையில் MGNREGS திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான ஊதிய உயர்வு தொடர்பான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வானது மாநில வாரியாக வேறுபடுகிறது.

அதன்படி கோவா மாநிலத்தில் தற்போது வழங்கப்படும் ஒரு நாள் ஊதியத்தில் அதிகபட்சமாக 34 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதைப்போல் உ.பி., உத்தரகண்ட் மாநிலங்களில் குறைந்தபட்சமாக தினசரி ஊதியம் 7 ரூபாய் வரை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

புதிய ஊதிய விகிதங்கள் உயர்வு சதவீத அடிப்படையில் பார்த்தால், கோவா தற்போதைய ஊதிய விகிதத்தை விட அதிகபட்சமாக 10.56% உயர்வைக் கண்டுள்ளது. உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகியவை மிகக் குறைந்த அளவான தலா 3.04% உயர்வினை பெற்றுள்ளது. அதைப்போல் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று மாநிலங்களும் MNREGS ஊதியத்தில் 10% க்கும் அதிகமான உயர்வைக் கண்டுள்ளன. கர்நாடகாவில், புதிய MNREGS ஊதிய விகிதம் ஒரு நாளைக்கு ரூ.349 ஆக (10.44% அதிகம்) அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்த ஊதியமானது ஒரு நாளைக்கு ரூ.316 என்றளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில், MNREGS ஊதிய விகிதங்கள் 2024-2025 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு ரூ.300 ஆக  (10.29% அதிகம்)நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது நடப்பு நிதியாண்டில் ஒரு நாளைக்கு ரூ.272 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Read also: 20 ஆண்டுகளாக KVK மூலம் தொடர் பயிற்சி- முன்னோடி விவசாயியாக திகழும் ஒண்டிமுத்து!

உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்கள், நாளொன்றுக்கு ரூ.230-லிருந்து ரூ.237 என்கிற அளவில் மிகக் குறைந்த (3.04%) ஊதிய உயர்வை பெற்றுள்ளன. மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் கிட்டத்தட்ட 10% உயர்வைக் கண்டுள்ளன. அதாவது, தற்போதுள்ள ரூ.221- என்கிற தினசரி ஊதியம் ரூ.243 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஹரியானாவில் MNREGS ஊதியத்தின் அதிகபட்ச விகிதம் (நாள் ஒன்றுக்கு ரூ. 374) நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதே சமயம் அருணாச்சல பிரதேசம் மற்றும் நாகாலாந்தில் மிகக் குறைந்த (ஒரு நாளைக்கு ரூ. 234) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் எவ்வளவு ஊதிய உயர்வு:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளொன்றுக்கு தற்போது ரூ.294 என்கிற அளவில் ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், ரூ.25 வரை உயர்த்தப்பட்டு இனி நாளொன்றுக்கு ரூ.319 தினசரி ஊதியமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தினால் விவசாய கூலி ஆட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது என விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநிலம் வாரியாக முழுப்பட்டியல் ஊதிய விகிதத்தை காண கீழ்காணும் இணைப்பை க்ளிக் செய்க.

MNREGS ஊதிய உயர்வு விவரம்

MGNREGA 2005 இன் பிரிவு 6 இன் துணைப் பிரிவு (1) இன் கீழ் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட இந்த புதிய ஊதிய விகிதங்கள் ஏப்ரல் 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more:

KVK 50: ஹெல்த் மிக்ஸ் தயாரிப்பில் அசத்தும் பெண்- வெற்றிக்கு வழிக்காட்டிய அரியலூர் கேவிகே

மாவுப்பூச்சி: விவசாயிகளின் மெயின் வில்லனே இதுதான்- கட்டுப்படுத்த என்ன வழி?

English Summary: In MGNREGA scheme State wise wage hike from April 1 Published on: 29 March 2024, 11:16 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.