1. செய்திகள்

வேளாண் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா - இஸ்ரேல் ஒப்பந்தம்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

இந்தியா - இஸ்ரேல் இடையேயான வேளாண் கூட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக 3 ஆண்டு செயல் திட்ட ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.

3 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்து

இந்தியா, இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான வேளாண் கூட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக வளர்ந்து வரும் இரு தரப்பு கூட்டணி மற்றும் இரு நாட்டு உறவுகளில் வேளாண்மை மற்றும் நீர் துறைகளை மையப்படுத்தி அங்கீகாரம் வழங்கி, விவசாய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான மூன்று வருட செயல் திட்ட ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.

இது குறித்து பேசிய மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இந்தியாவும் இஸ்ரேலும் இந்திய-இஸ்ரேல் வேளாண் சிறப்புத் திட்ட மையங்கள் மற்றும் இந்திய-இஸ்ரேல் சிறப்பு கிராமங்கள் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. வேளாண் துறைக்கு எப்போதுமே முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகறது. மேலும் கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் வேளாண் துறையில் இந்தியாவும் இஸ்ரேலும் இருதரப்பு உறவுகளில் ஈடுபட்டு வருகிறது.

இது 5-வது இந்திய-இஸ்ரேல் வேளாண் செயல் திட்டம் இதுவரை நான்கு செயல் திட்டங்களை நாம் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம். விவசாய சமூகத்தின் நன்மைக்காக வேளாண் துறையில் இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை இந்த புதியத் திட்டம் வலுப்படுத்தும் என்றார்.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும்

இந்த இஸ்ரேலிய செயல் திட்டங்களின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்கள், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான தொழில்நுட்பப் பரிமாற்றம், தோட்டக்கலையின் உற்பத்தி மற்றும் தரத்தை மேம்படுத்துவதுடன் விவசாயிகளின் வருவாயையும் உயர்த்தும் என்றும் அவர் கூறினார்.

செயல்திட்டத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல இணை அமைச்சர்கள் திரு பர்ஷோத்தம் ருபாலா, திரு கைலாஷ் சவுத்ரி, இஸ்ரேல் நாட்டின் அயல்நாட்டு விவகாரங்கள், இந்தியாவின் வெளிநாட்டு விவகாரங்கள், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகங்களின் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க....

நிலத்தடி நீருக்கும் பரிசோதனை அவசியம்!

தென்னை விவசாயத்தைச் சேர்ந்த 10,000 பேர் வேலையிழப்பு!

ஊரடங்கில் வேளாண் இடுபொருட்கள் தடையின்றி கிடைக்க வழிவகை! அதிகாரி தகவல்

English Summary: India and Israel sign a three-year work program for cooperation in Agriculture

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.