
Infectious Disease in IIT Chennai Students..
மேலும் 32 புதிய கோவிட் -19 வெடிப்புகள் செவ்வாய்க்கிழமை காலை இந்திய தொழில்நுட்ப நிறுவனம், சென்னை (ஐ.ஐ.டி-சென்னை) வளாகத்தில் பதிவாகியுள்ளன. இதையடுத்து ஐ.ஐ.டி சென்னை கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக திங்கள்கிழமை, ஐஐடி-மெட்ராஸ் மாணவர்கள் 18 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் நேற்றைய மொத்த எண்ணிக்கை 78 ஆக இருந்தது. நேற்று மாணவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட 1,121 மாதிரிகளின் முடிவுகள் செவ்வாய்கிழமை வெளியாகும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
திங்கள்கிழமை, தமிழகத்தில் 55 புதிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் பதிவாகினன. இதனால் மொத்த தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 34,53,607 ஆக உள்ளது. இறப்பு எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது. இன்று எந்த இறப்பும் பதிவாகவில்லை என்று சுகாதார துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று தொற்று உறுதியான 55 பேரில் அஸ்ஸாமில் இருந்து சாலை வழியாக திரும்பிய நபர் ஒருவரும் அடங்குவர். RT-PCR மூலம் சோதனை செய்தவர்களில் 33 ஆண்கள் மற்றும் 22 பெண்களுக்கு தொற்று உறுதியானது
தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் டாக்டர். ஜே ராதாகிருஷ்ணன், சென்னை மண்டல மருத்துவ அதிகாரி டாக்டர் ஆல்பி ஆகியோருடன் கல்லூரிக்கு சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
முன்னதாக, நேற்று முன் தினம், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதன் எதிரொலியாக தமிழகத்தில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க..
Share your comments