1. செய்திகள்

மத்திய அரசால் உங்கள் வங்கி கணக்கிற்கு வரும் மானியங்களை தெரிந்துகொள்ள எளிய முறை அறிமுகம்!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Credit by : Entrepreneur

மத்திய அரசின் ஜன் தன் திட்டம் (Jan Dhan Yojana Scheme), பி.எம். கிசான் திட்டம் (PM Kisan Scheme), எல்பிஜி (LPG) சிலிண்டர்களின் மானியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் உங்கள் வங்கிக் கணக்கிற்கு வரும் மானியங்கள் குறித்தும், வங்கிக் கணக்கு இருப்புத் தொகை குறித்தும் நீங்கள் அறிந்துகொள்ள ஒரு கிளிக் செய்தால் போதும்.

கொரோனா தொற்று காரணமாக பிரதமரின் ஜன தன் யோஜனா (PMJDY) திட்ட பெண் பயனாளிகள் தங்கள் கணக்கு இருப்புத் தொகை குறித்து அறிய வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்கள் அதை தங்கள் வீடுகளில் இருந்தே அறிந்து கொள்ள மத்திய அரசு வழிவகை செய்துள்ளது. மத்திய அரசின் பொது நிதி மேலாண்மை அமைப்பின் (Public Financial management system ) இணையதளத்தில் உங்கள் விவரங்களை உள்ளிட்டு வங்கிக் கணக்கின் இருப்பு தொகையை ஆன்லைனில் தெரிந்து கொள்ள முடியும்.

இதேபோல், மத்திய அரசு அறிவித்துள்ள பல்வேறு திட்டங்களின் மானிய தொகையும் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் இருப்பு வைக்கப்படுகிறது. அவைகளையும் அவரவர்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் குறிப்பிட்ட இலவச அழைப்பு எண்ணுக்கு பதிவு செய்த கைபேசி எண்ணில் இருந்து அழைத்தால் மட்டும் போதுமானது. பின்னர் உங்கள் தகவல்களை உங்கள் மொபைலுக்கு அனுப்பிவைக்கப்படும்.

இருப்பு தொகை எப்படி அறிந்துக்கொள்வது?

ஜன் தன், எல்.பி.ஜி மானியம், பிரதமர் கிசான் சம்மன் யோஜனா வங்கிக் கணக்கு இருப்பு ஆகியவற்றை அறிய கீழே குறிப்பிடப்பட்டுள்ளவற்றை பின்பற்றுங்கள்.

  • முதலில், பொது நிதி மேலாண்மை அமைப்பின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான -pfms.nic.in/NewDefaultHome.aspx இல் உள்நுழைக

  • இப்போது, ​​முகப்பு பக்கத்தில் உள்ள Know Your Payments என்பதை கிளிக் செய்யவும்.

  • பின் உங்கள் வங்கி பெயர், வங்கி கணக்கு எண் போன்ற முக்கியமான விவரங்களில் குறிப்பிடுங்கள்.

  • பின்னர், CAPTCHA code -யை சமர்ப்பிக்கவும்

  • பின் 'search' option -யை கிளிக் செய்யுங்கள்

  • இதன் பின் உங்கள் வங்கிக் கணக்கில் சமீபத்திய பணப் பரிமாற்றம் உங்களுக்கு கிடைக்கும்.

  • இதன் மூலம் உங்கள் வங்கி கணக்கில், மத்திய அரசு தனது மானியத்தை வழங்கி உள்ளதா என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.

  • சமீபத்திய பணக் கடன் மற்றும் தேதிக்குச் செல்வதன் மூலம் உங்கள் ஜன தன் கணக்கில், பிரதமர் கிசான் சம்மன் யோஜ்னா, எல்பிஜி மானியக் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை பயனாளிகள் தெரிந்துகொள்ளலாம்.

கணினி, மொபைலில் இணைய சேவை இல்லாத ஏழை எளிய பயனாளர்கள், நீங்கள் கணக்கு வைத்துள்ளு வங்கியின் குறிப்பிட்ட இலவச அழைப்பு எண்ணுக்கு, பதிவு செய்த கைபேசி எண்ணில் இருந்து அழைத்தால் மட்டும் போதுமானது. பின்னர் உங்கள் தகவல்களை வங்கியின் சார்பிலிருந்து குறுந்தகவலாக உங்கள் மொபைலுக்கு அனுப்பிவைக்கப்படும்.

Credit By : India inc group

எஸ்பிஐ (SBI), பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), இந்தியன் வங்கி (IB), பாங்க் ஆப் இந்தியா(BOI), எச்டிஎப்சி(HDFC), ஆக்சிஸ் வங்கி (AXIS BANK) மற்றும் ஐசிஐசிஐ வங்கி (ICICI BANK) ஆகியவற்றில் உங்கள் ஜன தன் கணக்கின் இருப்பு விவரங்களை தெரிந்துகொள்ள ஒரே ஒரு அழைப்பின் (Missed Call) மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI)

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 18004253800 மற்றும் 1800112211 ஆகிய இரண்டு எண்களில் ஒன்றை அழைத்து உங்களுக்கான மொழியைத் தேர்ந்தெடுக்கலாம். இதற்கு பிறகு, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு கொடுக்கப்பட்ட விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும், தொடர்ந்து வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை பற்றிய தகவல்கள் உங்கள் மொபைலில் கிடைக்கும்.

பாங்க் ஆப் இந்தியா (BOI)

பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட எண்ணிலிருந்து 09015135135 என்ற எண்ணிற்கு டயல் செய்வதன் மூலம் வங்கிக் கணக்கு தொகையை அறியலாம்.

எச்.டி.எஃப்.சி. (HDFC)

எச்.டி.எஃப்.சி வங்கி வாடிக்கையாளர்கள் 18002703333 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் செய்வதன் மூலம் தங்கள் கணக்கு இருப்பை சரிபார்க்கலாம். 18002703355 என்ற எண்ணிற்கு டயல் செய்வதன் மூலம் அவர்கள் ஒரு மினி அறிக்கையையும் பெறலாம்.

ஆக்ஸிஸ் வங்கி (Axis Bank)

ஆக்ஸிஸ் வங்கி வாடிக்கையாளர்கள் 18004195959 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலம் உங்கள் கணக்கு இருப்பு குறித்த விவரங்களைப் பெறலாம்

ஐசிஐசிஐ வங்கி (ICICI)

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் 9594612612 என்ற எண்ணில் மிஸ்டுகால் (Missed Call) கொடுத்து, ஐபிஏஎல் என எழுதி 9215676766 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்புவதன் மூலம் தகவல்களைப் பெறலாம்.

பி.என்.பி (PNB)

பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 18001802223 அல்லது 01202303090 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.

இந்தியன் வங்கி (IB)

இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் 180042500000 என்ற எண்ணிற்கு டயல் செய்யலாம். இது தவிர, 9289592895 என்ற எண்ணிற்கும் டயல் செய்து வங்கி கணக்கு மற்றும் அண்மைப் பரிமாற்றங்கள் குறித்த தகவல்களைப் பெறலாம்.

மேலும் படிக்க...

PM Kisan: பி.எம்-கிசான் திட்டத்தில் அடுத்த தவணை பெற ஜூன் 30க்குள் பதிவு செய்யுங்கள்!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறுதானியங்கள்!!

கொப்பரைத் தேங்காய்களைக் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி

English Summary: Introduce a simple method to check for Subsidy to your bank account by the central government Published on: 27 June 2020, 04:08 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.