1. செய்திகள்

மத்திய அரசின் ஊட்டச்சத்து திட்டங்களை கண்காணிக்க புதிய நடை முறைகள் அறிமுகம்

KJ Staff
KJ Staff
nutritional programs

ஊட்டச்சத்து குறைப்பட்டால் பாதிக்கப்படும் குழந்தைகள் வாழும் நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. கடந்த வாரம் வெளியான புள்ளிவிவரத்தின்படி இந்தியாவில் சுமார் 4.66 கோடி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 38% ஐந்து வயதிற்கு குறைவான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றும் இதில் 30% ஏழைகளுக்கு சரியான உன்வவும், ஊட்டச்சத்தும் கிடைப்பதில்லை. சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 2,155 கலோரியை உட்கொள்ள வேண்டும், ஆனால் இந்த 30% மக்களுக்கு வெறும் 1,811 கலோரி மட்டுமே கிடைக்கிறது.

இவ்வாறு ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி, நியாபகத் திறன், சுறுசுறுப்பு இன்மை, நீரிழிவு, உடல் பருமன், போன்ற பல்வேறு நோய்கள் சிறுவயதிலேயே ஏற்பட்டுவிடுகின்றன.

nutritional week childrens

மத்திய அரசின் ஊட்டச்சத்து திட்டங்கள்

இந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில் குழந்தைகள் மற்றும் கர்பிணி பெண்களுக்கு போஷன் அபியான், பிரதம மந்திரி மற்றும் வந்தனா யோஜ்னா, அங்கன்வாடி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் இந்த திட்டங்கள் முறையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ள.

போஷன் அபியான் திட்டத்தை நிதி ஆயோக் அமைப்பின் தொழில் நுட்ப பிரிவும், ஆன்லைன் மூலம்  பிரதம மந்திரி மற்றும் வந்தனா யோஜ்னா செயல்பாட்டையும், ஆங்கன்வாடி திட்டத்தை தேசிய, மாநில, மாவட்ட அளவில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் இத்திட்டங்களை குறித்து மாநில அதிகாரிகளுடன் நீராடியாகவும், வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவும் ஆலோசனை நடத்தப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தனர்.  

K.Sakthipriya
Krishi Jagran

English Summary: Introduction of new methods to monitor the nutritional programs of the Central Government Published on: 01 July 2019, 03:59 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.