1. செய்திகள்

"ஜல் சக்தி அபியான்" மழைநீர் சேகரிப்பை தீவிரமாக்க மத்திய அரசின் புதிய திட்டம்

KJ Staff
KJ Staff
rain water harvesting

நாட்டில் தண்ணீர் பற்றாக்குறையால்  குளம், கிணறு, ஏரி, ஓடை, போன்ற நீர் நிலைகள் வறண்டு காட்சி அளிக்கின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நீர் பாதுகாப்பு மற்றும் சேகரிப்பை ஊக்குவித்து நிலத்தடி நீரை உயர்த்துவதற்கு 'ஜல் சக்தி அபியான்" என்ற திட்டத்தை கடந்த ஜூலை 1 ஆம் தேதி மத்திய அரசு தொடங்கியுள்ளது.

'ஜல் சக்தி அபியான் திட்டத்தின் முதல் கட்டம் செப்டம்பர் 15 வரையும், இரண்டாவது கட்டம் அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 வரையும் செயல்படுத்தப்படும். முதல் கட்டத்தின் கீழ் நகர்ப்புற நீர் சேமிப்புக்கான  வழிகளை வெளியிட்டு அனைத்து மாநகராட்சிகளும் மழை நீரை சேமிப்பதற்கான சிறப்பு குழு ஒன்றை அமைத்து நிலத்தடி நீர் எவ்வளவு உறிஞ்சி எடுக்கப்படுகிறது, நிலத்தடி நீரின் நிலை குறித்து சிறப்பு கண்காணிப்பு வேண்டும் என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இதில் முக்கியமாக கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு  திட்டம் சேர்க்கப்பட்டுள்ளதா என்று பார்த்த பின்னரே கட்டுமான பணிக்கு அனுமதி  வழங்கப்படும் மற்றும் கட்டுமான பணி முடிந்த பின்னர் மழை நீர் சேகரிப்பு வசதி செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு மேற்கொண்ட பின்னரே கட்டிடத்திற்கான (ஓசிசி) சான்றிதழ் வழங்கப்படும்.

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த திட்டம்

reconstruction

மத்திய அரசின் ஆலோசனை படி மழை நீரை சேகரித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் மாநகராட்சி மக்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு வறண்டு கிடக்கும் நீர்நிலையை மீண்டும் முறையாக புனரமைக்க வேண்டும்.

வீடுகளின் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்து, செடிகள்,  மரக்கன்றுகள் நட்டு, மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்து, மழைநீரை சேமிக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு பலகைகள் முக்கிய இடங்களில் வைக்க வேண்டும்.

இவ்வகை செயல்பாடுகளை மேற்கொண்டு மழைநீரை சேகரிக்கும் வழிக்காட்டுதலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

https://tamil.krishijagran.com/news/to-raise-ground-water-proper-and-easy-rain-water-harvesting/

https://tamil.krishijagran.com/news/jal-shakti-abhiyan-formed-committee-to-solve-water-problem-255-experts-are-appointed-to-work-on-this/

k.Sakthipriya
Krishi Jagran

English Summary: Jal Shakti Abhiyan: Central government's new plan to intensify rainwater harvesting Published on: 08 July 2019, 03:51 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.