1. செய்திகள்

நிலத்தடி நீரை உயர்த்தும் முறையான மழை நீர் சேகரிப்பு

KJ Staff
KJ Staff
rain

அதிகரித்து வரும் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் குடங்களையும், கேன்களையும் தூக்கிக்க கொண்டு தெருத்தெருவாக நீருக்காக அலைகின்றனர். தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க மழை நீர் உதவுகிறது. இம்மழை நீரை பராமரித்துக்கொள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்  நீர் நுட்பவியல் மையம் பரிந்துரைத்துள்ளது.

rain water harvesting

வேளாண்மைக்கும் சரி, மக்கள் வாழ்க்கைக்கும் சரி நீர் மிக முக்கிய ஆதாரம். அந்த நீரை வழங்குவது மழை. வருடத்தில் 66 நாட்கள் மழை காலம் மற்றும் இம்மழை நாட்களில் 2.5 மி.மீ மழை காணப்படும். ஆனால் மழை நாட்கள் 44 ஆக குறைந்துள்ளது. தற்போது தமிழக்தில் குளிர் காலத்தில் 5 சதவீதம், கோடை காலத்தில் 15 சதவீதம், தென்மேற்கு பருவ காலத்தில் 35 சதவீதம் வடகிழக்கு பருவ காலத்தில் 45 சதவீதம் மழை பொழிகிறது என்று கோவை தமிழக வேளாண்மை பல்கலைக்கழகம்  நீர் நுட்பவியல் மைய இயக்குனர் எஸ்.பன்னீர் செல்வம் கூறினார்.

மழை நாட்கள் குறைந்துள்ள நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் 43 மி,மீ பெய்ய வேண்டும், ஆனால் அதில் பாதியளவு கூட பெய்ய வில்லை, மற்றும் ஜூலை மாதத்தில் 68 மி,மீ பெய்ய வேண்டும், ஆனால் அதற்கான அறிகுறியையே காண வில்லை என்றும் கூறினார். மேலும் வரும் காலங்களில் மழை நாட்கள் 40 ஆகவும் குறைய அதிக வாய்ப்புள்ளது என்றார். மழை பெய்யும் நாட்களும், மழையின் அளவும் குறைந்து விட்டால் மக்கள் வருங்காலத்தில் தண்ணீர் பஞ்சத்திற்கு ஆளாவார்கள் என்பது உறுதி. 

rainwater saving

இதனால் அவர் பரிந்துரைத்துள்ளது மழை பெய்யும் நேரங்களில் நீரை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். வீடுகளில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மழை நீரை சேமிப்பது மிக எளிது. கட்டிடத்தின் மேல் பகுதியை சுத்தமாக வைத்து சிறிது நேரம் மழை நீரை வெளியேற விட்டு அதன் பின் பைப் மூலம் சிமெண்ட் தொட்டிகளில் அல்லது  ரப்பர் தொட்டிகளில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். வீடுகளுக்கு வெளியில் இடத்தை சுத்தமாக வைத்து சிறிய குளம் போல் அமைத்து மழை பெய்யும் போது நீரை சேமித்துக்கொள்ளலாம். பெரிய பாத்திரங்களை கொண்டும்  மழை நீரை சேகரிக்கலாம். 

இவ்வாறு மழை நீர் அளிக்கும் போதே சேமித்து வைத்துக்கொண்டால் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்கலாம்.

https://tamil.krishijagran.com/news/steps-to-increase-ground-water-importance-of-rain-water-harvesting-in-india-uno-giving-alert/

https://tamil.krishijagran.com/health-lifestyle/water-problem-dirty-water-back-to-back-disease-what-is-the-solution-what-action-will-government-take/

K.Sakthipriya
Krishi Jagran

English Summary: To Raise Ground Water proper and Easy Rain Water Harvesting Published on: 04 July 2019, 04:48 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.