1. செய்திகள்

உழவர்களின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறுமா? தொடங்கியது வேளாண் பட்ஜெட் தாக்கல்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
MRK Panneerselvam presenting the TN Agriculture Budget 2023

தமிழ்நாட்டு சட்டசபையில் நடப்பாண்டிற்கான (2023-2024 ) வேளாண் பட்ஜெட்டினை இன்று தாக்கல் செய்யத் தொடங்கினார் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

தமிழக சட்டசபையில் நடப்பாண்டிற்கான பொது பட்ஜெட்டினை நேற்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். மகளிருக்கான உரிமைத்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் உயர்வு, தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம், மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசனுக்கு சென்னையில் நினைவிடம், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை விரிவுப்படுத்துதல் உட்பட பல்வேறு அறிவிப்புகளையும், திட்டங்களையும் பிடிஆர் தெரிவித்தார். நேற்று வெளியிடப்பட்ட தமிழக அரசின் பொது பட்ஜெட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இன்று வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்தது முதலே வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த முறையினை போன்றே இந்த முறையும், வேளாண் பட்ஜெட்டினை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்ச்செல்வம் இன்று தாக்கல் செய்ய தொடங்கியுள்ளார்.

முன்னதாக வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாயச் சங்கப் பிரதிநிதிகள், வேளாண் விஞ்ஞானிகள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து பட்ஜெட் உரை தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் கூறியிருந்தார்.

மேலும் படிக்க: மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டா மாப்பிள்ளையா இருக்கலாம்- பட்ஜெட் உரையில் சிரிப்பை ஏற்படுத்திய வேளாண் அமைச்சர்

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. இனி ரேஷன் கடைகளில் கம்பு, கேழ்வரகு- வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளின் கருத்து கேட்பு கூட்டங்களில் பங்கேற்க இயலாத மக்களும் தங்களின் கருத்துக்களை உழவன் செயலியின் வாயிலாக தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டது. மேலும் கடிதம் , tnfarmersbudget@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும், 9363440360 என்ற வாட்ஸ் அப் எண் மூலமும் விவசாயிகளிடம் கருத்துகள் பெறப்பட்டிருந்தன.

இதற்கு மத்தியில் பட்ஜெட்டுக்கு முன்னோட்டமாக வெளியிடப்பட்ட தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை 2023 முதல்வரால் வெளியிடப்பட்டது. அதனை மையமாக வைத்து பட்ஜெட் தாக்கல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அரசின் அங்கக வேளாண்மை கொள்கைக்கு விமர்சனங்கள் கிடைத்த நிலையில், எந்த ஒரு கொள்கையும் நிலையானதல்ல. மாற்றத்திற்குட்பட்டதே. எனவே, இக்கொள்கை தொடர்பாக எழுந்துள்ள திறனாய்வு மற்றும் விமர்சனக் கருத்துக்களை ஆராய்ந்து தேவையானவற்றை எடுத்துக் கொண்டு, புதிய பொருண்மைகளை சேர்த்துக்கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்மை- உழவர் நலத்துறை எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: 5 லட்சம் பரிசு, நம்மாழ்வார் விருது- அங்கக விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அமைச்சர்

கரும்பு, நெல், பருத்தி போன்ற வேளாண் விளைபொருட்களுக்கான கொள்முதல் விலை உயர்த்தப்படுமா? புதிய நெல் கொள்முதல் நிலையங்கள், விவசாயப்பொருட்களுக்கு மானியம் கிடைக்குமா ? என விவசாயிகள் எதிர்ப்பார்பில் உள்ளனர்.

மேலும் காண்க:

சரக்கு போக்குவரத்து துறைக்கு தொழில் அந்தஸ்து வழங்க திட்டம்- மேலும் முழுத்தகவலுக்கு காண்க

இவுங்க 3 பேரும் ரொம்ப STRICT போல.. ஒரு கோடி கிளப்பில் இணைந்த டிக்கெட் பரிசோதகர்கள்

English Summary: MRK Panneerselvam presenting the TN Agriculture Budget 2023 Published on: 21 March 2023, 10:08 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.