1. செய்திகள்

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய விருது: தமிழகத்தில் 6 பேர் தேர்வு!

R. Balakrishnan
R. Balakrishnan
National Award for Disabled Persons

மாற்றுத் திறனாளிகள் (Disabled Persons) உரிமையை ஊக்குவிப்பதற்கான தேசிய விருதுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை பிரகடனத்தின் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் டிச., 3ம் தேதி, சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில், மாற்றுத் திறனாளிகளில் சிறந்த நபர்கள் மற்றும் அவர்களுக்கு சிறந்த சேவை வழங்கியவர்களுக்கு, மாநில மற்றும் மத்திய அரசுகள் விருது வழங்கி கவுரவிக்கின்றன. அந்த வகையில், 2020ம் ஆண்டுக்கான மாற்றுத் திறனாளிகள் உரிமைக்கான தேசிய விருதுக்கு (National Award), தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள், ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய விருது

சென்னை வேளச்சேரியை சேர்ந்த வேங்கடகிருஷ்ணன், மந்தவெளியைச் சேர்ந்த ஜோதி, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஏழுமலை, காஞ்சிபுரம் மாவட்டம், கானத்துார் ரெட்டிகுப்பத்தைச் சேர்ந்த தினேஷ். மேலும், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மானஷா தண்டபாணி, நாமக்கல் மாவட்டம் பேட்டப்பாளையத்தை சேர்ந்த பிரபாகரன் ஆகியோர், தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாற்றுத் திறனாளிகள் உரிமையை ஊக்குவிப்பதில்,

சிறந்த மாநிலமாக தமிழகம்; சிறந்த மாவட்டமாக, சேலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 3ம் தேதி டில்லியில் நடக்க உள்ள சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்ச்சியில், இவ்விருதுகள் மத்திய அரசால் வழங்கப்பட உள்ளன. இத்தகவலை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலர் லால்வேனா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

SBI வங்கியின் அசத்தல் திட்டம்: இரட்டை நன்மையுடன் அறிமுகம்!
காவலர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் விடுப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு!

English Summary: National Award for Disabled Persons: 6 people selected in Tamil Nadu! Published on: 04 November 2021, 01:55 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.