1. செய்திகள்

பென்சனர்களுக்கு புதிய வசதி: இனி எல்லாமோ ரொம்ப ஈசி தான்!

R. Balakrishnan
R. Balakrishnan
Pensioners new scheme

ஓய்வூதியதாரர்களுக்கான சேவைகளை எளிமைப்படுத்துவதற்காக அரசு பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. ஆனால், ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை அதிகாரிகளிடம் விரைவாக தெரிவிப்பதற்கு வழிகள் இல்லை என்பது நெடுநாள் கோரிக்கையாக உள்ளது.

ஓய்வூதியதாரர்கள் (Pensioners)

ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை தெரிவிப்பதற்கு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஓய்வூதியதாரர்கள் இனி முதன்மை கணக்கு அலுவலகத்தில் (Principal account general office) பென்சன் தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம். இதுபோக, ஓய்வூதியதாரர்களுக்குஇலவச டோல் ஃப்ரீ எண்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஓய்வூதியதாரர்கள் 1800-2200-14 என்ற டோல் ஃப்ரீ எண்ணுக்கு அழைத்து தங்களது குறைகளை தெரிவிக்கலாம். இந்த சேவை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை பயன்படுத்த முடியும்.

இதுபோக வாய்ஸ் மெயில் சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 020-71177775 என்ற எண்ணுக்கு ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை வாய்ஸ் மெயிலாக அனுப்பலாம். இச்சேவையை எல்லா நாட்களும் 24 மணி நேரமும் பயன்படுத்தலாம்.

ஓய்வூதியதாரர்களின் குறைகளை பெற்று அதுகுறித்து நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய பென்சன் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு உள்ளது. ஓய்வூதியதாரர்கள் தங்களது குறையை தெரிவித்தும் தீர்வு கிடைக்கவில்லை எனில் மேல்முறையீடு செய்யலாம்.

மேலும் படிக்க

PF பயனாளர்களுக்கு குட் நியூஸ்: விரைவில் 81,000 ரூபாய் டெப்பாசிட்!

PM Kisan: பயனாளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா? எப்படி சரிபார்ப்பது?

English Summary: New facility for pensioners: now everything is very easy! Published on: 10 October 2022, 09:58 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.