1. செய்திகள்

வானிலை குறித்த அறிவிப்புகளை துல்லியமாக கணக்கிட புதிய தொழில்நுட்பம்!

Aruljothe Alagar
Aruljothe Alagar
New technology to accurately calculate weather forecasts!

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)  வானிலை தகவல்களை துல்லியமாக கணக்கிட டீப் மைண்ட் என்ற நிறுவனம் புதிய மாடல் ஒன்றை உருவாகியுள்ளது. யுனைடெட் கிங்டமின் தேசிய வானிலை சேவையான Met Office உடன் லண்டனை தளமாகக் கொண்ட AI நிறுவனம் இணைந்து உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கருவியால் 90 நிமிடங்களில் வானிலை சாத்தியக்கூறுகளை மிக துல்லியமாக கணிக்க முடியும். இந்த கருவியின் பெயர் DGMR (Deep Generative model of rainfall) என்று அழைக்கப்படுகிறது. வானிலை முன்னறிவிப்பாளர்களுக்கு வானிலையை சரியாக கணித்து கூறுவதில் சவாலாகவே இருந்தது.இதனை சரி செய்ய இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தொழில்நுட்பத்தின் செயல்பாடுகளை கண்டறிய பல நிபுணர்கள் தற்போது பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களுடன் ஒப்பிட்டனர். இந்த புதிய தொழில்நுட்பமான DGMR -ன் திறன்கள் குறித்து செய்திகள் வெளியாகி வருகின்றன. வானிலை குறித்த இயக்கம், தீவிரம் மற்றும் பல காரணிகளை நிபுணர்கள் அளவிட்டனர்.

வானிலை குறித்த செய்திகள் விவசாயிகள், விமான போக்கு வரத்து, அவசர சேவைகள் என்று பல விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த அணைத்து சேவைகளும் சுகுமாக செயல்பட வானிலை செய்திகளை தான் நம்பி உள்ளது. தற்போதைய முன்னறிவிப்பு நுட்பங்கள் வெப்பநிலை மாற்றங்கள், மேகங்கள் மற்றும் காற்றின் மாற்றங்கள் ஆகியவற்றை கணிக்க கணினி உருவகப்படுத்துதல் பயன்படுத்தப்படுகின்றன.

மழையை கணிக்க தற்போது பயன்படுத்தப்படும் முறைகள் சிறப்பாகவே வேலை செய்கின்றன. ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு வானிலை என்ன நிலையில் இருக்கும் என்பதை சரியாக கணிக்க முடிவதில்லை. இந்த செயல்முறைக்கு "நௌ காஸ்டிங்"  (nowcasting) என்று பெயர்.

AI-ஐ பயிற்றுவிக்க, DeepMind ரேடார் தரவைப் பயன்படுத்தி வருகிறது. வானிலை இயக்கம் மற்றும் உருவாக்கம் போன்ற விஷயங்களி நாள் முழுவதும் கண்காணிக்கிறது. MIT தொழில்நுட்ப மதிப்பாய்வின்படி, இங்கிலாந்து ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு புதிய அறிவிப்பை வெளியிடுகிறது. இந்த தரவுகளின்  தொகுப்பு ஆழ்ந்த கற்றல் நெட்வொர்க்கிற்கு அளிக்கப்பட்டது. உண்மையான உலக தரவு AI மூலம் முன்கணிப்பு தரவுகள் உருவாக்க பயன்படுகிறது.

DGMR எதிர்பார்த்த செயப்பாடுகளை செய்கிறதா என்பதைப் புரிந்து கொள்ள, ஆராய்ச்சி குழு இங்கிலாந்து வானிலை அலுவலகத்தில் 56 வானிலை முன்னறிவிப்பாளர்களிடம் DGMR-ன் செயல்திறனை கண்காணிக்க கூறியுள்ளது. இந்த தொழில்நுட்பம் குறித்த பெரும்பான்மையை பார்க்கும் பொழுது 86 சதவீதம் பேர் DGMR அளித்த முடிவுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க...

weather: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை!

English Summary: New technology to accurately calculate weather forecasts! Published on: 05 October 2021, 11:52 IST

Like this article?

Hey! I am Aruljothe Alagar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.