1. செய்திகள்

தமிழகத்தில் அதிகரித்து வரும் காசநோய்! 59 ஆயிரத்தை தாண்டிய எண்ணிக்கை!

T. Vigneshwaran
T. Vigneshwaran
தமிழகத்தில் அதிகரித்து வரும் காசநோய்

நாடு முழுவதிலும் காசநோயை ஒழித்திட மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

மேலும் வருகிற 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்களிடையே காசநோய் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் காசநோயை குணப்படுத்தும் நடவடிக்கை கணிசமாக உயர்ந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. காசநோயால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 84 சதவீதம் நபர்கள் முதல்கட்ட சிகிச்சையிலேயே குணப்படுத்துவதாகவும், மீதமுள்ள நோயாளிகள் அனைவரும் தொடர் சிகிச்சைகள் மூலம் பூரணமாக குணமாக்குவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் காசநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை காலத்தில் ஊட்டச்சத்து அளிப்பதற்கான நிதியுதவிகளும் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காசநோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்களின் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன.

அப்போது இந்தியா முழுவதிலும் 15 லட்சம் பேருக்கு காசநோய் இருந்தது தெரியவந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டுமே 3 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை இந்த ஆண்டில் மட்டும் கடந்த 9 மாதங்களில் 59,164 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில் 46,313 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 12,851 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் முதல்கட்ட சிகிச்சை பெற்றுள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு முதல் 9 மாதங்களில் 51,751 பேர் மட்டும் காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு சற்று அதிகமானோர் காசநோய் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

மேலும் படிக்க:

ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் நாளை முதல் தொடக்கம்!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, 5 நாட்களுக்கு கனமழை!

English Summary: Tuberculosis on the rise in Tamil Nadu! Number over 59 thousand! Published on: 05 October 2021, 02:38 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.