1. செய்திகள்

இனி உரம் பற்றாக்குறை இருக்காது- கலெக்டர் அறிவிப்பு

T. Vigneshwaran
T. Vigneshwaran
Fertilizer Scarcity

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாம்பா சாகுடிபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்க உரங்கள் தயார் நிலையில் இருப்பதாக கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் நகர் பகுதியில் உள்ள மேலாண்மை துறையின் உரக்கிடங்கு, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சம்பா பருவ நெல் விதைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை 312.7 மீ.மி மழை பெய்துள்ளது. இம்மழையினை கொண்டு விவசாயிகள் விதைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 31 ஆயிரத்து 36 ஹெக்டர் வரை பயிர் விதைப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடப்பு மாதத்திற்கு யூரியா 4,695 மெ.டன் ஒதுக்கீடு பெறப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக இருப்பு வைத்துக் கொள்ளும் வகையில் கிரிப்கோ யூரியா 1,500 மெ.டன் ஒதுக்கீடு பெறப்பட்டு இதுவரை 373.5 மெ.டன் கிரிப்கோ யூரியா கொண்டுவரப்பட்டது,

மேலும் தற்போது 30 மெ.டன் வரப்பெற்றுள்ளது. இதன் மூலம் 1579 மெ.டன் யூரியா, 1729 மெட்ரிக் டன் டி.ஏ.பி, 118 மெ.டன் பொட்டாஷ், 2570 மெ.டன் காம்ப்ளஸ், 50 மெ.டன் சூப்பர் பாஸ்பேட் என மேற்கண்ட உரவகைகள் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகளுக்கு எந்தவித உரத்தட்டுப்பாடு இன்றி நடப்பு சம்பா பருவ சாகுபடிக்கு தேவையான உரங்கள் வழங்க தயார் நிலையில் உள்ளன. விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி வேளாண் பணிகளை ஆர்வமுடன் மேற்கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க:

கொப்பரை கொள்முதல் காலம் நீட்டிப்பு - கலெக்டர் தகவல்

நவீன சலவையகம் அமைக்க ரூ.3 லட்சம் நிதி உதவி

English Summary: No More Fertilizer Scarcity – Collector Notice Published on: 25 September 2022, 07:23 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.