1. செய்திகள்

ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட பட்ட படிப்பு சாத்தியமா?

KJ Staff
KJ Staff
UGC Students

பலவித பட்டபடிப்புகளை ஒரே நேரத்தில் பயில்வதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆராய்வதற்காக குழு ஒன்றை பல்கலைகழக  மானிய குழு நியமித்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டில்,  ஐதராபாத் பல்கலைகழக துணை வேந்தராக இருந்த, புர்கான் கமர்  தலைமையிலான அந்த குழு, இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  ஒரு பல்கலைகழகத்தில்  முழுநேரமாக பயிலும் மாணவர்கள் அதே பல்கலைகழகத்திலோ அல்லது வேறொரு பல்கலைகழகத்திலோ, தொலைதூர அல்லது பகுதி நேர பட்டப் படிப்பை தொடர்வதற்கான சாத்திய கூறுகள் குறித்து பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்கப்பட்டது.

ஆய்வின் முடிவில் ஒன்றிற்கு மேற்பட்ட படிப்பை அனுமதிக்கலாம் என பரிந்துரைத்தது. ஆனால் பல்வேறு காரணங்களை சுட்டிகாட்டி இந்த குழுவின் பரிந்துரையை யுஜிசி நிறுவகம்  நிராகரித்து விட்டது.    

Distance Education

இந்நிலையில் மீண்டும்  ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகள் தொடர்வதற்கான அனுமதி குறித்து ஆய்வு மேற்கொள்ளபட்டு வருகிறது. யு.ஜி.சி., துணைத் தலைவர் பூஷண் பட்வர்தன் தலைமையிலான  புதிய குழு இதனை செய்து வருகிறது. இதற்கான  முதல் கூட்டமும் நடந்து முடிந்துள்ளது.

தற்போது உள்ள தொழில்நுட்ப வசதிகள் அனைத்தையும் எளிதாகவும், விரைவாகவும் செய்கிறது. கல்வியை இன்று எளிமையாகவும், செய்முறை விளக்கத்துடன் படிக்கவும் எத்தனையோ வசதிகள் உள்ளன. எனவே மாணவர்கள் தொலைதூரகல்வி அல்லது பகுதி நேர கல்வி ஒரே  பல்கலைகழகத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட பட்டப் படிப்பு அல்லது வேறு  பல்கலைகழகத்தில்  மற்றொரு பட்டப் படிப்பை படிப்பதற்கு அனுமதி அளிப்பது குறித்து ஆய்வு செய்ய பட்டு பெறுகிறது.

வழக்கமான பட்டப் படிப்புடன், விருப்பமான அல்லது சிறப்பு அல்லது தனி திறன் கொண்ட பட்டப் படிப்பையும் படிக்க, மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் அவர்களுக்கான வேலைவாய்ப்பு அதிகமாகும். இதனை கருத்தில் கொண்டு இதற்கான ஆய்வறிக்கை தாயார் செய்யப்பட்டு வருகிறது. வெகு விரைவில் இதற்கான ஒப்புதல் கிடைக்கும் என் எதிர்பார்க்க படுகிறது. 

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Now Students Can Pursue specialized Courses Along with Their Regular Programmes Published on: 22 July 2019, 02:50 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.